விளையாட்டு

  • associate partner

தோனியை வீழ்த்திய யார்க்கர் மன்னன் நடராஜன்...யார் இவர்?

நேற்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணியின் பவுலிங்கும் மிகவும் சிறப்பாகவே இருந்தது. முக்கியமாக தமிழக வீரர் நடராஜன் போட்ட ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. ஹைதராபாத்தை அணிக்காக விளையாடி வரும் நடராஜன் இந்த சீசனில் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

தோனியை வீழ்த்திய யார்க்கர் மன்னன் நடராஜன்...யார் இவர்?
தோனியை வீழ்த்திய நடராஜன்..
  • Share this:
கிரிக்கெட் உலகில் பேட்ஸ்மேன்கள் ஒரு ஓவர் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிடுவதும், பவுலர்கள் ஒரு ஓவர் ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசுவதும் அசாத்தியமானது. இதை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் சேலம் சின்னப்பம் பட்டியிலிருந்து கிளம்பிய யார்க்கர் மன்னன் நடராஜன்.

உலக வரைபடத்தில் அடையாளப்படுத்தாத கடைகோடி கிராமத்திலிருந்து கிளம்பி சர்வதேச கிரிக்கெட் உலகில் தனது பெயரை உறக்கச்சொல்லியிருக்கிறார் நடராஜன். 2017 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தாலும் நடப்பு தொடரில் தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.

தோனியை வீழ்த்திய நடராஜன்உள்ளூரில் நடக்கும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மூலம் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தார். அன்றாட கூலி வேலைக்கு செல்லும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த நடராஜன் மீது பொறுப்புகள் அதிகமாகவே இருந்தது. மூன்று தங்கை, ஒரு தம்பி, குடும்பத்தில் மூத்த மகன் என  அனைவரையும் வாழ்க்கையில் கறைசேர்க்க விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் .

தான் தேர்ந்தெடுத்த விளையாட்டில் நண்பர் ஜெயபிரகாஷ் உதவியுடன் விடா முயற்சியால் வளர்ந்துவரும் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு நடராஜனின் பந்துவீச்சை அடையாளம் கண்ட சேவாக், பஞ்சாப் அணிக்கு 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். வாய்ப்புகள் கிடைத்தாலும் காயம், பந்துவீச்சில் புகார் என ஒருவருடம் கிரிக்கெட் வாழ்க்கை சோகமானதாக மாறியது. விடாது முயற்சித்த நடராஜன் மீண்டு வந்து நடப்பு தொடரில் ஹைதராபாத் அணிக்காக அசத்தி வருகிறார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது துள்ளியமான பந்துவீச்சால் மிரட்டி வருகிறார். அஸ்வினுடனான உரையாடலில் தனது கனவு விக்கெட் தோனி என குறிப்பிட்டு அதையும் நிறைவேற்றியிருக்கிறார் நடராஜன்.இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 29 யார்க்கர்களை தெரிக்கவிட்டு, 9 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இதில் விராட், தோனி விக்கெட் ஸ்பெஷல்... மேலும் ஒரு ஓவரில் அனைத்து பந்தையும் யார்க்கராக வீசி சர்வதேச வீரர்களுக்கு சவால் விட்டு வருகிறார். இவரது திறமையை பார்த்து வியந்த வேகப்பந்து ஜாம்பவான் பிரட்லி புகழாரம் சூட்டியுள்ளார்.

தடைகளை தாண்டி தான் தேர்ந்தெடுத்த விளையாட்டில் சாதித்து வரும் நடராஜன் தன்னைப்போல் ஏழ்மையில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு தன் கிராமத்தில் தனியாக பயிற்சி மையம் ஆரம்பித்து பயிற்சி வழங்கிவருகிறார். அதற்கு சான்றுதான்  டி.என்.பி.எல்  Highest Wicket Taker பெரியசாமி.

மேலும் படிக்க... ஹைதராபாத்துடன் மோதும் சென்னை: தோனியின் புதிய வியூகங்கள் கைகொடுக்குமாதனது விடா முயற்சியாலும், திறமையாலும் உலக வரைபடத்தில் தனது கிராமத்தின் பெயரை தேட வைத்த சேலம் சின்னப்பம்பட்டி நடராஜனின் அடுத்த இலக்கு  இந்தியாவுக்காக ஆடனும் என்கிறார்.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading