ஐபிஎல் பணம் விஷம் - உறவுகளை முறித்து விடும் - சைமண்ட்ஸின் திடீர் ஞானம்
ஐபிஎல் பணம் விஷம் - உறவுகளை முறித்து விடும் - சைமண்ட்ஸின் திடீர் ஞானம்
சைமண்ட்ஸ்- கிளார்க்
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மிகவும் நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருந்த ஒருவர். களத்தில் இருந்தபோது, விளையாட்டில் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அவர் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார், ஆனால் ஆஸ்திரேலிய அணியுடன் அவரது நேரம் களத்துக்கு வெளியே நெடிய சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்தது.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மிகவும் நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருந்த ஒருவர். களத்தில் இருந்தபோது, விளையாட்டில் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அவர் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார், ஆனால் ஆஸ்திரேலிய அணியுடன் அவரது நேரம் களத்துக்கு வெளியே நெடிய சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்தது.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 2008 இல் நடந்த போட்டியின் தொடக்கப் பதிப்பில், டெக்கான் சார்ஜர்ஸ் (DC) மூலம் $1.8 மில்லியனுக்கு வாங்கப்பட்டார். அவர் மூன்று ஆண்டுகள் அணிக்கு ஆடி, 2009 இல் பட்டத்தை வெல்ல உதவினார்.
சைமண்ட்ஸ் ஐபிஎல்லில் இருந்து பெறப்பட்ட பணம், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குடனான தனது உறவை எவ்வாறு விஷமாக்கியது மற்றும் கிளார்க் போன்ற பிறரிடமிருந்து பொறாமைக்கு அவரது பெரும் பண ஒப்பந்தம் வழிவகுத்தது என்பதை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பாக பிரெட் லீ போட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியதாவது:
நானும் மைக்கேல் கிளார்க்கும் நெருக்கமாகிவிட்டோம். அவர் (கிளார்க்) அணிக்கு வந்ததும், நான் அவருடன் நிறைய பேட்டிங் செய்தேன். அதனால் அவர் பக்கத்தில் வந்ததும், நான் அவரை மிகவும் கவனித்தேன். அது ஒரு பிணைப்பை உருவாக்கியது.
மேத்யூ ஹெய்டனுக்கும் நான் ஐபிஎல் ஒப்பந்தத்தில் பெற்ற பெரிய பணம் பொறாமையைக் கிளப்பியது, ஐபிஎல் தொடர் தொடங்கியபோது மேத்யூ ஹைடன் என்னிடம், எனக்கு நல்ல ஊதியம் கிடைத்திருப்பதால், ஐபிஎல்தொடரில் விளையாடப் போகிறேன் என்று தெரிவித்தார். அதேநேரம், கிளார்க்கும், நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் அவருக்கு பொறாமையாக இருந்தது.
பணம்தான் பல வேடி்ககையாயான விஷயங்களுக்கு காரணம் என்று நான் ஊகிக்றேன். பணம் நல்ல விஷயம்தான். ஆனால் அது விஷமும்கூட. நம்முடைய உறவில் விஷத்தை கலந்துவிடும். மேத்யூ ஹேடன் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது, என்னிடம் என்னிடம் என்ன கூறினார் என்பது குறித்து விரிவாக தெரிவிக்கவிரும்பவில்லை.என்னுடைய நட்பு ஹெய்டனுடன் நீண்டகாலம் இல்லை. இருப்பினும் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இங்கு அமர்ந்துகொண்டு யார் மீதும் சேற்றை வீச மாட்டேன்
சைமண்ட்ஸ் பின்னர் 2011 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் இடம்பெற்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் முன், அந்த உரிமையாளரின் முதல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல அவர் உதவினார். புனே வாரியர்ஸ் இந்தியாவுக்காக 2012 தொடரில் மைக்கேல் கிளார்க் ஆடினார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.