2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ தனது பெயரை பதிவு செய்யததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2023-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 23-ந்தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்குபெறும் வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் நேற்று அறிவித்து இருந்தது. அதில் 991 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் நாடு:
இந்தியா -771 வீரர்கள்
ஆஸ்திரேலியா -57 வீரர்கள்
தென் ஆப்பிரிக்கா -52 வீரர்கள்
மேற்கு இந்திய தீவுகள் -33 வீரர்கள்
இங்கிலாந்து -31 வீரர்கள்
நியூசிலாந்து -27 வீரர்கள்
இலங்கை- 23 வீரர்கள்
ஆப்கானிஸ்தான் -14
வங்கதேசம்- 6 வீரர்கள்
நெதர்லாந்து -7 வீரர்கள்
ஸ்காட்லாந்து -2 வீரர்கள்
யுஏஇ - 6 வீரர்கள்
ஜிம்பாவே -6 வீரர்கள்
அயர்லாந்து - 8 வீரர்கள்
நமிபியா -5 வீரர்கள்
பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள். 20 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். ரூ.2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், வில்லியம்சன், நிகோலஸ் பூரன், கேமமுன் கரீன் உள்பட 21 பேர் ரூ.2 கோடி அடிப்படையில் உள்ளனர். ரூ.2 கோடி மற்றும் ரூ.1.50 கோடி அடிப் படை விலை பட்டியலில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை.
ரூ.1 கோடி பட்டியலில் மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே ஆகிய 3 இந்திய வீரர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த பிராவே மற்றும் டெல்லி அணியில் இருந்து விடுவித்த ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோர் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ ஏலத்தில் பங்கேற்கமால் இருப்பது சென்னை ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்திருக்கும் 39 வயதாகும் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற போகிறாரா என ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Dwayne Bravo, IPL, IPL Auction