ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே உட்பட எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் ரசிகர்கள் சிஎஸ்கே அணி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே யூடியூப் பக்கத்தில் அந்த அணியின் சிஇஓ ஐபிஎல் ஏலத்தின் நிகழ்வுகள் குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் ரெய்னா மற்றும் டூ பிளசியை ஏலத்தில் எடுக்காதது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
அந்த வீடியோவில் காசி விஸ்வநாதன், சிஎஸ்கே அணியில் கடந்த 12 ஆண்டுகளாக சுரேஷ் ரெய்னா ஒரு நிலையான வீரராக இருந்து வந்தார். ரெய்னா அணியில் இல்லை என்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அணியின் அமைப்பு என்பது எந்த அணியை வைத்திருக்க விரும்புகிறதோ அந்த அணியின் வடிவம் மற்றும் வகையைப் பொறுத்தது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இந்த அணிக்கு பொருந்தமாட்டார் என்று நினைத்தேன் என்றுள்ளார்.
மேலும் டூ பிளெசியை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக எங்களுடன் இருந்த அவரை நாங்கள் இழந்து உள்ளோம். இது ஏலத்தின் செயல்முறை மற்றும் நடைமுறையை பொறுத்தது என்றுள்ளார்.
Also Read : #Boycott_ChennaiSuperKings ட்விட்டரில் ட்ரெண்ட்
இதனிடையே ஐபிஎல் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை அணியில் எடுக்காமல் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனாவை எடுத்தற்காக சிஎஸ்கே அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஸ்டேகை ரசிகர்கள் டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.