• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 | ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சேப்பாக்கத்தில் தொடக்கம்... மும்பை - பெங்களூரு பலப்பரீட்சை

IPL 2021 | ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சேப்பாக்கத்தில் தொடக்கம்... மும்பை - பெங்களூரு பலப்பரீட்சை

ஐ.பி.எல்

ஐ.பி.எல்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை சென்னையில் தொடங்க உள்ளது.

  • Share this:
    கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படாமல் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடைபெற உள்ளன.

    நாளை தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெறுகின்றன. இதனிடையே பெங்களூரு அணி வீரர் சாம்ஸ், டெல்லி வீரர் அக்சர் படேல் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

    சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை அணியும்-பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலானவை இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கே நடைபெற உள்ளன. வரும் மே மாதம் 30-ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. நடப்பாண்டின் ஐ.பி.எல் போட்டிகளில் மைதானத்திற்குள் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: