Home /News /sports /

IPL 2022 Full Schedule: ஐ.பி.எல் திருவிழா மார்ச் 26-ல் தொடங்குகிறது - முதல் போட்டியில் சென்னை- கொல்கத்தா மோதல்

IPL 2022 Full Schedule: ஐ.பி.எல் திருவிழா மார்ச் 26-ல் தொடங்குகிறது - முதல் போட்டியில் சென்னை- கொல்கத்தா மோதல்

ஐ.பி.எல்

ஐ.பி.எல்

2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 26-ம் தேதி தொடங்கும் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

    பி.சி.சி.ஐ.யால் நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பிற கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்காதவர்கள் கூட ஐ.பி.எல் தொடரில் தீவிர ஆர்வம் காட்டுவார்கள். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 ஐ.பி.எல் தொடர்களில் சென்னை அணியும், மும்பை அணியும் அதிக முறை கோப்பையை வென்று வலுவான அணிகளாக உள்ளன. சென்னை அணியைப் பொறுத்தவரை ஐ.பி.எல் தொடங்கப்பட்ட முதலிலிருந்து தற்போதுவரை தோனி கேப்டனாக இருந்துவருகிறார்.

    மும்பை அணியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா தலைமையில் வலுவான அணியாக இருந்துவருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற மெகாஏலத்தில் அணி வீரர்கள் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்த முறை அனைத்து அணிகளும் புது அணி போலத்தான் விளையாடக் கூடிய சூழல் உள்ளது. இதுவரையில், 8 அணிகளுடன் நடைபெற்ற ஐ.பி.எல், இந்த முறை 10 அணிகளுடன் களமிறங்குகிறது. இந்தமுறை ஐ.பி.எல் தொடருக்கு டாடா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது.

    ஐ.பி.எல் 2022 தொடருக்கு அட்டவணையை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மார்ச் 26-ம் தேதி முதல்போட்டி தொடங்குகிறது. 65 நாட்கள் நடைபெறவுள்ள தொடரில் 70 லீக் போட்டிகள் மற்றும் 4 ப்ளேஆப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

    மார்ச் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக மும்பை மற்றும் புனே மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடைபெறவுள்ளன.

    ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணை:



    ஐபிஎல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்..
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி