ஐ.பி.எல் போட்டிகள் ரத்து: காப்பீடு இழப்பீட்டுத் தொகைப் பெற முடியாமல் தவிக்கும் பி.சி.சி.ஐ

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியாத சூழலும் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியாத சூழலும் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியாத சூழலும் ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. எனினும், கொரோனா அச்சம் காரணமாக அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகினர்.

    மேலும், சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    ஐ.பி.எல் போட்டியை நடத்துவதால் ஒளிபரப்பு உரிமம், டைட்டில் ஸ்பான்சர்ஷிப், விளம்பர ஒப்பந்தம் ஆகியவை மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்.

    காப்பீடு மூலம் நிவாரணம் பெற முடியாது

    ஐ.பி.எல் போட்டிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அளவு 3,500 கோடி ரூபாய் ஆகும். எனினும், ஐ.பி.எல் போட்டிக்கு ஏற்பாட்டாளர்கள் எடுத்துள்ள காப்பீட்டில் கொரோனாவுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, ஒத்தி வைக்கப்பட்டாலோ இழப்பீடு பெற முடியாது.

    தற்போது, எடுக்கப்பட்டுள்ள காப்பீட்டின்படி நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் மற்றும் தீவிரவாத தாக்குதல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டாமல் மட்டுமே இழப்பீடு பெற முடியும்.

    இதேபோல், கொரோனா காரணமாக போட்டியில் இருந்து வீரர்கள் விலகினாலும் அதற்கான இழப்பீட்டை காப்பீடு மூலம் பெற முடியாது. எனெனில் அவர்கள் கொரோனா காரணமாகவே விலகுகின்றனர் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

    புத்திசாலித்தனமாக சிந்தித்த விம்பிள்டன் ஏற்பாட்டாளர்கள்

    பெருந்தொற்று தொடர்பான காப்பீடு விவகாரத்தில் விம்பிள்டன் போட்டி ஏற்பாட்டாளர்கள் எடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையும் இங்கு கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப் மூலம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    உலக யுத்தம் அல்லாமல் வேறு எந்த காரணங்களுக்காகவும் இந்த போட்டி ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால், போர் அல்லாத காரணத்திற்காக முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது.

    விம்பிள்டனின் ஆண்டு வருமானம்  2,365 கோடி ரூபாய் ஆகும். போட்டி ரத்து செய்யப்பட்டதால் வருமானம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. எனினும், அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப் புத்திசாலித்தனமாக எடுத்திருந்த காப்பீடு மூலம் இழப்பில் இருந்து தப்பித்தது.

    2003 முதல் விம்பிள்டன் போட்டிக்காக காப்பீட்டுக் கட்டணத்தை அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப் செலுத்தி வருகிறது. இந்த காப்பீடு பெருந்தொற்றால் ஏற்படும் பாதிப்பை உள்ளடக்கியது ஆகும். ஆண்டுக்கு ரூ.14 கோடி என்ற விகிதத்தில் கடந்த 17 ஆண்டுகளில் காப்பீடு பிரீயம் தொகையாக சுமார் 220 கோடி ரூபாயை அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப்  செலுத்தியுள்ளது.

    இதன் பலனாக, கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டி நடக்காததால் ரூ. 1,078 கோடி காப்பீட்டுத் தொகையை உரிமைக் கோர அகில இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பால் முடிந்தது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: