• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பஞ்சாப் கிங்ஸிலிருந்து கே.எல்.ராகுல் விலகுகிறார்?

பஞ்சாப் கிங்ஸிலிருந்து கே.எல்.ராகுல் விலகுகிறார்?

கே.எல்.ராகுல்.

கே.எல்.ராகுல்.

பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மீண்டும் பஞ்சாப் அணிக்கு ஆடமாட்டார், விலகுகிறார், வேறு அணி அவரை ஒப்பந்திக்க அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    கிரிக்கெட் இணையதளம் ஒன்றின் தகவல்களின் படி, “எந்த ஒரு அணியும் ஏலத்தில் தங்கள் ஆர்டிஎம் அட்டையைப் பயன்படுத்தலாம். இந்நிலையில் திரைக்க்குப் பின்னால் நடந்த விவாதங்களில் கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகி வேறு அணிக்கு ஆட சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ராகுல் இப்போது பயோ பபுளில் இருப்பதால் அவரை இது குறித்து கேட்க அணுக முடியவில்லை. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் இதனை மறுத்துள்ளார்” என்று அந்த கிரிக்கெட் இணையதளச் செய்தி கூறுகிறது.

    வீரராக பெரிய அளவில் பஞ்சாப் கிங்ஸுக்கு ஆடிய கே.எல்.ராகுல் கேப்டனாக சோபிக்கவில்லை, இந்நிலையில் அவருடைய சொந்த மாநிலமான கர்நாடகா பிரான்சைசி ஆர்சிபி கேப்டனாக கோலி விலகுவதையடுத்து கே.எல்.ராகுல் தன் சொந்த மண்ணில் ஆர்சிபி கேப்டன்சியை ஏற்க வருகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது, ஆனால் இவையெல்லாம் உறுதி செய்யப்படாத தகவல்கள்.

    ஆர்சிபி அணி விராட் கோலி தலைமையில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. கோலிக்கும் கேப்டனாக இது ஆர்சிபி அணிக்கு கடைசி தொடர், ஆனால் வீரராக ஆர்சிபியில்தான் தொடர்வேன் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி தனித்தனி வீரர்களாக இருந்ததே தவிர ஒரு அணியாக திரண்டு எழவில்லை, கொல்கத்தா போல் இல்லை.

    இதற்கிடையே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் பயிற்சிக்காக வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் படேல், ஷிவம் மாவி ஆகியோர் இணையலாம் என்று இதே ரிப்போர்ட் கூறுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த மூவரும் உண்மையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு பேசுபொருளாக மாறியுள்ளனர். இவர்கள் சேர்வது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எலிமினேட்டர் சுற்று முடிந்தவுடன் வெளியாகும் என்று தெரிகிறது.

    ஹர்திக் பாண்டியா பந்து வீச முடியாது என்பதால் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது, இது அக்.15ம் தேதிக்குள் எடுக்கப்பட வேண்டிய முடிவாகும். ஐசிசி அக்.15ம் தேதியை இறுதிக்கெடுவாக நிர்ணயித்துள்ளது, எனவே ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளலாம்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: