CSK Dhoni | ஐபிஎல் 2021: தோனியின் சிஎஸ்கே தான் சாம்பியன் : அடித்துச் சொல்கிறார் சுனில் கவாஸ்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2021 இப்போதைக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளில் சிஎஸ்கேதான் சாம்பியன் அணியாக விளையாடியது என்கிறார் சுனில் கவாஸ்கர்.

  • Share this:
    ஐபிஎல் 2021 வீரர்களுக்கான பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி கொரோனா உள்ளே நுழைய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை கொரோனா தொற்றியுள்ளது. இதனையடுத்து ஐபிஎல் 2021 இப்போதைக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளில் சிஎஸ்கேதான் சாம்பியன் அணியாக விளையாடியது என்கிறார் சுனில் கவாஸ்கர்.

    சிஎஸ்கே


    மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் ஐபிஎல் 2021 பாதியிலேயே நிறுத்தப்பட்டது. லீக் மட்டத்தில் தோனி தலைமை சிஎஸ்கே, கோலி தலைமை ஆர்சிபி, ரிஷப் பந்த் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்தான் பிரமாதமாக ஆடின, இந்த 3 அணிகளும் கடும் போட்டியில் மாறி மாறி முதலிடம் பிடித்தன.

    ஆர்.சி.பி vs சி.எஸ்.கே


    இந்த 29 போட்டிகளிலும் சாம்பியன் அணியாக ஆடிய அணி எது என்று ஒரிஜினல் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு எழுதிய பத்தியில் அலசியுள்ளார்:

    மற்ற அணிகள் டாப் பார்மில் இருக்க கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் மிகவும் ஏமாற்றம் அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் டாப் அணியாகத் திகழ்கிறது.

    ரிஷப் பந்த்


    இத்தனையாண்டு காலமாக சாம்பியன்கள் போல் ஆடியதை மீண்டும் கைவரப்பெற்றது. இந்த முறை அதன் ஆற்றல் புத்துணர்வு பெற்றது போல் இருந்தது. இத்தனைக்கும் அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

    இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை 3ம் நிலையில் களமிறக்கி ஆடவைத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்த இடது கை பேட்ஸ்மென் வெளுத்துக் கட்டினார்.



    சீரான முறையில் நன்றாக ஆடும் ஃபாப் டுபிளெசிஸ் அடித்து நொறுக்கும் பார்மில் இருந்தார். இவர்களோடு எதிர்கால இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்ந்து டாப் ஸ்டார்ட் கொடுத்தனர்.

    ஆட்ட நாயகன் ருதுராஜ் கெய்க்வாட்.


    சாம் கரண் ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம் கண்டு வருகிறார். இப்போது அவர் ஒரு முறையான ஆல்ரவுண்டராக மதிக்கப்பட வேண்டியவர். சிஎஸ்கே அணியின் இறுதி ஓவர் பவுலிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது, ஏனெனில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக 218 ரன்கள் எடுத்தும் போதாமல் தோற்றது. எனவே இதில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி விட்டால் ஐபிஎல் 2021 சாம்பியனாகவும் சிஎஸ்கே ஆவதற்குத் தடையில்லை.

    இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.
    Published by:Muthukumar
    First published: