Home /News /sports /

ஐபிஎல்-இல் பாதி போட்டிகளில்தான் ஆடுவோம் என்று இந்திய வீரர்கள் தைரியமாகக் கூற வேண்டும் - ரவி சாஸ்திரி

ஐபிஎல்-இல் பாதி போட்டிகளில்தான் ஆடுவோம் என்று இந்திய வீரர்கள் தைரியமாகக் கூற வேண்டும் - ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

இந்திய அணிக்கு சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால் ஐபிஎல் தொடர் காலக்கட்டத்தை ஓய்வுக்காக வீரர்கள் பயன்படுத்த வேண்டும், மேலும் இந்த முறை பாதிப் போட்டிகளில்தான் ஆடுவோம் என்று இந்திய வீரர்கள் தைரியமாக அணீ நிர்வாகத்திடம் கூற முன் வர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    அதே போல் விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டை விட்டு விலக வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி ஊடகம் ஒன்றில் கூறியதாவது:

    ஓராண்டில் இந்திய அணி கிரிக்கெட் விளையாடாத நாட்கள் எதுவென்றால் ஐ.பி.எல். போட்டி நடக்கும்போது மட்டும்தான். இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு வீரரும் தங்களது ஓய்வு நேரத்தை திட்டமிட்டு செயல்பட வேண்டும். சில சமயத்தில், ‘ஐ.பி.எல்.-ல் நான் பாதி போட்டிகளில் தான் நான் விளையாடுவேன். அதற்குரிய ஊதியம்தந்தால் போதும் என்று அணி நிர்வாகத்திடம் வீரர்கள் தைரியமாக சொல்ல வேண்டும்.

    விராட் கோலி இடைவிடாது தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிக்கும்கேப்டனாக செயல்பட்டார். மனதளவில் புத்துணர்ச்சி பெற அவருக்கு ஓய்வு மிகவும் அவசியமாகும். அது தான் தற்போது சரியானதாக இருக்கும்.

    நடப்பு தொடரில் ஏற்கனவே பாதி போட்டிகளில் விளையாடி விட்ட கோலி எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகவேண்டும். இதனை நான் கோலிக்காக மட்டும்சொல்லவில்லை. இந்திய அணிக்காக ஆடும் அனைவருக்கும் இந்த யோசனையை சொல்கிறேன்.

    சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து பிரமாதமாக ஆட வேண்டும் என்றால் சில நேரம் இத்தகைய கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும். விராட் கோலியால் இன்னும் 5-6 ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும். அவரை போல் பல சிறந்த வீரர்கள் இது போன்ற கடினமான காலக்கட்டத்தை சந்தித்து இருக்கிறார்கள். அதனால் கோலி அது பற்றி அதிகமாக சிந்திக்காமல், போதிய ஓய்வு எடுத்து விட்டு புத்துணர்ச்சியுடன் திரும்ப வேண்டியது அவசியமாகும். என்றார் ரவி சாஸ்திரி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Ravi Shastri, Virat Kohli

    அடுத்த செய்தி