ஐ.பி.எல் 2020 : இறுதிப்போட்டி தேதி மாற்றம், சீன ஸ்பான்சர்கள் தக்கவைப்பு - முக்கிய அறிவிப்புகள் வெளியானது

வார விடுமுறை அல்லாமல் வார நாட்களில் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

ஐ.பி.எல் 2020 : இறுதிப்போட்டி தேதி மாற்றம், சீன ஸ்பான்சர்கள் தக்கவைப்பு - முக்கிய அறிவிப்புகள் வெளியானது
ஐபிஎல் கோப்பை
  • Share this:
ஐ.பி.எல் 2020 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 2020 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இறுதிப்போட்டியை நவம்பர் 8-ம் தேதியில் இருந்து நவம்பர் 10-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல் இறுதிப்போட்டியை தீபாவளி வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


நவம்பர் 10-ம் தேதி இறுதிப்போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறை அல்லாமல் வார நாட்களில் ஐ.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐ.பி.எல் நிர்வாக குழுவின் ஆலேசானைக்கு பின்னர் இன்று அறிவிக்கப்பட்டது.

மேலும் சீனா உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் ஸ்பான்சர்களையும் தக்கவைத்து கொள்வதாக முடிவெடுத்துள்ளனர். ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர் விவோ சீன நிறுவனத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடதக்கது.

ஐ.பி.எல் தொடருக்கான அனுமதியை மத்திய அமைச்சகம் அடுத்த வாரத்திற்குள் அளிப்பார்கள் என்று நம்புவதாக ஐ.பி.எல் குழு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading