• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Final : சவுரவ் கங்குலி அழைப்பை மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

IPL 2021 Final : சவுரவ் கங்குலி அழைப்பை மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

ஐபிஎல் 2021 இறுதி போட்டியை பார்க்க அழைப்பு விடுத்த சவுரவ் கங்கலியின் கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் ரமீஸ் ராஜா மறுத்துவிட்டார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 இறுதிப் போட்டி துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 192 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    கிரிக்கெட் பாகிஸ்தானின் செய்திகளின்படி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில், சவுரவ் கங்குலி ரமீஸ் ராஜாவை இறுதிப் போட்டியை பார்க்க அழைத்தார். ஆனால் ரமீஸ் ராஜா இறுதி போட்டியை பார்க்க மைதானத்திற்கு வரவில்லை. இந்த கூட்டத்தில் இருவரும் ஆசிய கிரிக்கெட்டை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர். 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர் இல்லை. முக்கிய போட்டிகளில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மோதுகின்றன. ஐபிஎல் தொடரிலும் பாகிஸ்தான் வீரர்கள் நுழைவதற்கு தடை உள்ளது.

    Also Read : இந்த அவமானம் எனக்கு தேவையா... ட்ரோல் செய்யப்படும் ரிஷப் பந்த்

    சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சிஎஸ்கே 17 முறையும் கொல்கத்தா அணி 9 முறை மட்டுமே வென்றுள்ளது. இறுதி போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதி உள்ளன. இதில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் சென்னை 4 முறையும் கொல்கத்தா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் 2 முறை மோதியதில் சிஎஸ்கே அணியே வெற்றி பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: