• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR | நொறுக்கிய டு ப்ளஸி.. சிஎஸ்கே அபாரம்.. கொல்கத்தாவுக்கு பிரம்மாண்ட இலக்கு!

CSK vs KKR | நொறுக்கிய டு ப்ளஸி.. சிஎஸ்கே அபாரம்.. கொல்கத்தாவுக்கு பிரம்மாண்ட இலக்கு!

Du plessis

Du plessis

ருதுராஜை தொடர்ந்து ராபின் உத்தப்பா டுப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடுத்தடுத்து சிக்ஸர்களை தூக்கி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியது.

  • Share this:
ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஃபாப் டு ப்ளஸியின் அபார அரை சதத்தின் உதவியுடன் 192 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணிக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.  2010, 2011 மற்றும் 2018 என மூன்று சீசன்களில் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது.

சென்னை பேட்டிங்:

14வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி இன்றிரவு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது.

morgan - Dhoni


ஓப்பனர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், ஃபாப் டு ப்ளஸியும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களை மிகவும் மந்த ஆட்டத்துடன் தொடங்கிய சென்னை வீரர்கள் 3வது ஓவரில் இருந்து அதிரடி பாணிக்கு மாறினர். ஒவ்வொரு ஓவரிலும் பந்தை பவுண்டரிக்கு விரட்டியதால் அணியின் ஸ்கோர் எகிறியது.

முதல் 6 ஓவர்களில் பவர்பிளேயின் முடிவில் சென்னை அணி 50 ரன்களை எடுத்தது. சென்னை அணி 6வது முறையாக பவர்பிளேயில் 50 ரன்கள் எடுத்தது. மேலும் சென்னை அணி பவர்பிளேயில் 50 ரன்கள் அடித்த அனைத்து மேட்ச்களிலும் அந்த அணி வெற்றி பெற்று வந்திருக்கிறது சென்னை அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

ஏமாற்றிய ருதுராஜ்:

8 ஓவர்களில் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் 9வது ஓவரின் முதல் பந்திலேயே சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதிரடியாக ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட், சுனில் நரைன் பந்துவீச்சில் 23 பந்துகளில் 27 ரன்களுக்கு சிவம் மவியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

CSK


ருதுராஜை தொடர்ந்து ராபின் உத்தப்பா டுப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடுத்தடுத்து சிக்ஸர்களை தூக்கி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில் அதிரடி பாணிக்கு மாறிய டு ப்ளஸி அபாரமாக அரை சதம் கண்டார். இவர் சிக்ஸ் அடித்து மிரட்டலாக அரை சதத்தை கடந்தார். ராபின் உத்தப்பாவும் சளைத்தவர் அல்ல, அவரும் தன் பங்குக்கு சிக்ஸராக நொறுக்கினார். அதிரடி காட்டி ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்களில் சுனில் நரைன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்.யூ முறையில் ஆட்டமிழந்தார். எல்.பி.டபிள்யூவை எதிர்த்து ரிவ்யூ கேட்ட போதும் அவர் அவுட் ஆனது உறுதியானது.

உத்தப்பாவுக்கு பின்னர் மொயின் அலி, டு ப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் மிகவும் மந்தமாக ஆட்டத்தை தொடங்கிய மொயின் அலி பின்னர் அவரும் அதிரடி பாணிக்கு மாறி சிக்ஸர், பவுண்டரியாக நொறுக்கினார். இருவரின் அதிரடியும் கடைசி பந்து வரை தொடர்ந்தது.

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. டு ப்ளஸி கடைசி பந்தில் கேட்ச்சாகி அவுட் ஆனார். டு ப்ளஸி 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டும், சிவம் மவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். கொல்கத்தா அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கிறது.

அரிய ஒற்றுமை:

 சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெம்மிங்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லமும் சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியவர்கள் என்பது ஒரு ஆச்சரிய ஒற்றுமையாக இருந்தது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: