Home /News /sports /

பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா சிறந்த ‘டெத் பவுலர்’ - தோனி பாராட்டு

பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா சிறந்த ‘டெத் பவுலர்’ - தோனி பாராட்டு

பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா

பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரனா

மலிங்கா போலவே அச்சு அசலாக பிரதி எடுத்தது போல் வீசுகிறார் சிஎஸ்கே அணியின் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, நேற்று ஷுப்மன் கில்லை எல்.பி.யில் வீழ்த்திய பந்து 2011 உலகக்கோப்பையில் சேவாகை மலிங்கா வீழ்த்திய பந்து போலவே இருந்தது. சிஎஸ்கே தோற்றாலும் அடுத்த ஆண்டுக்க்கென்று ஒரு சிறந்த டெத் பவுலரை கைவசம் வைத்திருக்கின்றனர்.

நேற்று பிளே ஆஃப் வாய்ப்பெல்லாம் இல்லை எனும் போது தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசனுக்கு வாய்ப்பு அளிக்கிறார் தோனி. அவர் ஆடுவதைப் பார்த்தால் அடடே இத்தனைபோட்டிகளாக இவரைப் போய் உட்கார வைத்தாரே என்றே தோன்றுகிறது, அவர் 39 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் சீரியசான பவுலிங்கை சவட்டுபவர் அல்ல என்ற ரீதியில் 49 பந்துகளில் 53 ரன்கள் என்று மந்தமான இன்னிங்ஸ் என்றாலும் சிஎஸ்கே 133 ரன்களை எட்டுவதற்கு உதவியது, இல்லையெனில் சிஎஸ்கே அன்று போல் 100க்கும் கீழ்தான்.

தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்தி மான் சாஹா தனது பேட்டிங் திறமையை வேறொரு பரிமாணத்துக்கு உயர்த்தி 57 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவர்களில் 137/3 என்று குஜராத் வெற்றி பெற்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த ‘பேபி’ மலிங்கா செல்லமாக அழைக்கப்படும் இளம் பவுலர் மதீஷா பதிரணா 3.1 ஓவர் 24 ரன் 2 விக்கெட் என்று அசத்தினார். நன்றாக வீசுகிறார் மலிங்காவைப் போலவே தாழ்வான சைடு ஆர்ம் ஆக்‌ஷன், கில், ஹர்திக் பாண்டியா என்ற தலைகளையே சாய்த்து விடக்கூடிய திறமை இவரது பொக்கிஷமாகும்.

இந்நிலையில் தோனி இவரைப் பாராட்டி மேட்ச் முடிந்த பிறகு கூறுகையில், “இவர் பிரமாதமான டெத் பவுலர்.மலிங்கா போலவே வீசுகிறார். அவர் பாணி பந்து வீச்சில் தவறுக்கு வாய்ப்பு பெரிய அளவு உண்டு. இவரது பவுலிங் ஆக்‌ஷனில் பெரிய அளவு பவுன்ஸ் இருக்காது. அதனால் லெந்த் ஒரு யார்டு முன் பின் இருந்தால் கூட மிடில் ஆஃப் த மட்டையில் பட்டு பறக்கும்.

ஆனால் அதே வேளையில் அவரது ஆக்‌ஷன் இப்படி இருப்பதால் கணிப்பதும் கடினம். அவரிடம் நல்ல ஸ்லோ பந்தும் உள்ளது. எனவே அவரை கவனமாகப் பார்த்துத்தான் ஆட முடியும். எனவே அவரை கவனித்து ஆட சில விநாடிகள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர் ஒரு டீசண்டான வேகத்தில் வீசுவதால் சீரான முறையில் இவர் பந்துகளை அடிப்பது கடினம்” என்றார் தோனி.
Published by:Muthukumar
First published:

Tags: CSK, IPL 2022, MS Dhoni

அடுத்த செய்தி