10 வருஷமாச்சு இன்னும் ஐபிஎல் பணம் கைக்கு வரவில்லை: புலம்பும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்

பிராட் ஹாட்ஜ்.

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஐபிஎல் உரிமையாளரைக் கண்டுப்பிடித்துக் கொடுங்கள், தனக்கும் ஐபிஎல் தொகை வந்து சேரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  முந்தைய உலக டி20 போட்டித் தொடருக்கான பரிசுத்தொகையையே இன்னும் இந்திய வீராங்கனைகளுக்கு பிசிசிஐ அளிக்கவில்லை என்று பிரிட்டன் பத்திரிகை ஒன்று விளாச, அதைப் பார்த்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஐபிஎல் உரிமையாளரைக் கண்டுப்பிடித்துக் கொடுங்கள், தனக்கும் ஐபிஎல் தொகை வந்து சேரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

  ஐபிஎல் 2011 சீசனில் ஆடிய வீரர்களுக்கு 35% பணம் இன்னும் செட்டில் ஆகவில்லை என்று கூறுகிறார் முன்னாள் ஆஸ்திரேலிய இடது கை வீச்சாளர் பிராட் ஹாட்ஜ்.

  பிராட் ஹாட்ஜ் அப்போது இருந்த கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து தனக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என்று கூறியிருக்கும் பிராட் ஹாட்ஜ், தனது ஐபிஎல் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரக் கோரி பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

  கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் உலக டி20 போட்டித் தொடருக்கான பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள வீராங்கனைகளுக்கு இந்த வாரத்தில்தான் இன்வாய்ஸ் கோரியுள்ளது பிசிசிஐ.

  இந்த செய்தி பிரிட்டன் செய்தி ஊடகம் ஒன்றில் வெளியாக அதனையடுத்து பிராட் ஹாட்ஜ் தனக்கும் இன்னும் 2011 ஐபிஎல் தொகையைல் நிலுவை உள்ளது என்றும் பிசிசிஐ அதை பெற்றுத்தர முடியுமா என்றும் கேட்டுள்ளார்.

  இது தொடர்பாக பிராட் ஹாட்ஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், “கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக ஆடிய வீரர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் 35% தொகை வந்து சேரவில்லை. பிசிசிஐ அந்தப் பணத்தை பெற்று தர முடியுமா?”என்று கேட்டுள்ளார்.

  கேரளாவைச் சேர்ந்த கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக 14 போட்டிகள் ஆடினார் ஹாட்ஜ். 285 ரன்களை 35.63 என்ற சராசரியில் எடுத்தார்.

  வங்கி உத்தரவாதம் அளிக்காததால் பிசிசிஐ கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது. பிராட் ஹாட்ஜ் ஒரு பிரமாதமான வீரர், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு நிறைய போட்டிகளில் ஆடவேண்டியவர், ரிக்கி பாண்டிங் போல் வந்திருக்க வேண்டியவர் அங்குள்ள சிலபல அரசியலால் இவர் ஓரங்கட்டப்பட்டார்.

  ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடினார். விக்டோரியா, லீஷயர், கொச்சி டஸ்கர்ஸ், மெல்போர்ன் ரெனகேட்ஸ், பரிசால் பர்னர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகளுக்கும் ஆடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தன் ஐபிஎல் அறிமுகப்போட்டியில் ஆடினார் பிராட் ஹாட்ஜ். ஐபிஎல் தொடரில் இவர் 66 போட்டிகளில் ஆடினார்.
  Published by:Muthukumar
  First published: