Home /News /sports /

IPL Auction 2022: கடந்த ஐபிஎல் தொடரில் 42 ரன்களே அடித்த லிவிங்ஸ்டனுக்கு ரூ.11.5 கோடியா?- காரணம் என்ன?

IPL Auction 2022: கடந்த ஐபிஎல் தொடரில் 42 ரன்களே அடித்த லிவிங்ஸ்டனுக்கு ரூ.11.5 கோடியா?- காரணம் என்ன?

லியாம் லிவிங்ஸ்டன்

லியாம் லிவிங்ஸ்டன்

கடந்த ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் வெறும் 42 ரன்களையே எடுத்த ராஜஸ்தானுக்கு ஆடிய லிவிங்ஸ்டன் இந்த முறை ரூ.11.5கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதன் பின்னணி இதோ:

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் ஞாயிற்றுக்கிழமை அதிக விலை உயர்ந்த வெளிநாட்டு வீரர் ஆனார். நான்கு உரிமையாளர்களிடையே தீவிர ஏலப் போரின் ஒரு பகுதியாக இருந்த பிறகு, 28 வயதான பஞ்சாப் கிங்ஸ் ஒரு பெரிய தொகைக்கு ரூ. 11.5 கோடிக்கு இவரை ஏலம் எடுத்தது. கடந்த ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் வெறும் 42 ரன்களையே எடுத்த ராஜஸ்தானுக்கு ஆடிய லிவிங்ஸ்டன் இந்த முறை ரூ.11.5கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதன் பின்னணி இதோ:

    கடந்த ஆண்டு லியாம் லிவிங்ஸ்டனை அடிப்படை விலை ரூ.75 லட்சத்துக்கு எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இவர் யுஏஇயில் 5 இன்னிங்ஸ்களில் 42 ரன்களையே எடுத்தார். அவருக்குப் போய் இந்த முறஒ பஞ்சாப் கிங்ஸ் ரூ.11.5 கோடி கொடுத்துள்ளதே என்று கேட்கலாம்.

    இவர் விலை எகிறியதற்கு 2 காரணங்கள் உள்ளன. 4 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து டி20 அணியில் தன்னை தேர்வு செய்யச் செய்தார். வந்தவுடன் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் 43 பந்துகளில் 103 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக அடித்து மைதானம் நெடுக பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தார். அதன் பிறகு நடந்த தி ஹண்டரட் தொடரில் மதிப்பு மிக்க வீரராக இருந்தார். 2021-ல் மட்டும் இவர் டி20 போட்டிகளில் 86 சிக்சர்கள் விளாசியுள்ளார். கிளென் பிலிப்ஸ் சிக்சர்களில் முதலிடம் வகிக்கிறார்.

    2வதாக லியாம் லிவிங்ஸ்டனை ஒரு பெரிய சொத்தாகப் பார்க்கின்றனர். அவர் பன்முகத்திறமை அவருக்கு இந்த் விலையைப் பெற்றுக்கொடுத்துள்ளது. பவுலிங்கில் ஆஃப் பிரேக், லெக் பிரேக் போடுவார், பேட்டிங்கில் 1ம் நிலையிலிருந்து 7ம் நிலை வரை எங்கு வேண்டுமானாலும் இறக்கலாம்.

    ஆகவே இந்தக் காரணங்களெல்லாம் சேர்ந்துதான் அவரது விலையை இப்படி உயர்த்தியுள்ளடு. ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.11.5 கோடிக்கு உயர்ந்தார் லிவிங்ஸ்டன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, IPL Auction

    அடுத்த செய்தி