மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடம் ஸாம்பா அல்லது அடில் ரஷித் அவசியம் தேவை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் வெள்ளியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் தங்கள் அணிக்கான சரியான வீரர்களை எடுப்பது குறித்து ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தளவில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஏலத்தின்போது இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா மற்றும் இந்தியாவின் மயங்க் அகர்வால் ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் வீரர்களை எடுப்பதற்காக அதிக தொகையை கைவசம் வைத்திருக்கிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு கடந்த சீசனில் மோசமாக இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சரை கையில் வைத்துள்ளனர். பும்ராவும் ஃபிட்டாக இருக்கிறார். இந்த சீசனில் பலமுள்ள அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்கும்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..! விழாக்கோலத்தில் அர்ஜெண்டினா..
ரோகித் சர்மாவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் லெக் ஸ்பினர்கள் இல்லை. இன்றைய சூழலில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ரஷீத் கான் போன்ற பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.
எனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஆடம் ஸாம்பா, சுனில் நரேன், அடில் ரஷித் ஆகியோரில் ஒருவரை அணியில் எடுக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஸாம்பா அல்லது அடில் ரஷித் மும்பை அணிக்கு பொருத்தமாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL