முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 AUCTION : ஐ.பி.எல். ஏலத்தில் 3 வீரர்களை குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

IPL 2023 AUCTION : ஐ.பி.எல். ஏலத்தில் 3 வீரர்களை குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

2 வெளிநாட்டு வீரர்களை சென்னை அணி எடுத்துக் கொள்ளலாம். தற்போது அணியில் ரூ. 20.45 கோடி வரை ஏலத்தில் செலவு செய்ய உரிமை உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வீரர்களுக்கான ஏலத்தின்போது 3 முக்கிய வீரர்களை அணிக்கு கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வம் காட்டும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்து வருகிறது. இந்த கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது முதல் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்படுகிறார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முன்பாக மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பாண்ட்யா இருந்த நிலையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டது.

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை : 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை

கடந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்பட்டார். ஆனால் அணி தொடர்ச்சியாக சில ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் பொறுப்பு தோனிக்கு அளிக்கப்பட்டது. 14 லீக் ஆட்டங்களில் சென்னை அணி 10 போட்டிகளில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டுநடக்கவுள்ளள 16ஆவது ஐபிஎல் சீசனுக்காக சென்னை அணி தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் 23ஆம் தேதி நடக்கவுள்ள ஏலத்தில் 3 முக்கிய வீரர்களை அணியில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரம் நெய்மர்… இன்ஸ்டா பதிவு வைரல்

தற்போது அணியில் இருந்து டுவேன் பிராவோ, ஆடம் மில்னே, ராபின் உத்தப்பா, ஹரி நிஷாந்த், கே.எம்.ஆசீப், பகத் வர்மா, ஜெகதீசன், கிறிஸ்ஜோர்டன் ஆகிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அணியில் 18 வீரர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக 2 வெளிநாட்டு வீரர்களையும் சென்னை அணி எடுத்துக் கொள்ளலாம். தற்போது அணியில் ரூ. 20.45 கோடி வரை ஏலத்தில் செலவு செய்ய உரிமை உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வீரரும் ஆல்ரவுண்டருமான சாம் கரன், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ரிலீ ரூசோ ஆகிய 2பேரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர்கள் இருவருக்கும் ரூ. 2 கோடி அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர இந்திய வீரர் மணிஷ் பாண்டேவையும் ஏலத்தில் எடுப்பதற்கு சென்னை அணி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சென்னை அணியில் உள்ள வீரர்கள் பட்டியல் -

தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரினா, சிம்மேஷ் சௌத்ரினா, சிம்மச் சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா

First published:

Tags: Chennai Super Kings