Home /News /sports /

ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டிம் டேவிட் யார்?- ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ்

ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டிம் டேவிட் யார்?- ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ்

ரூ.8.25 கோடிக்கு ஏலம் போன மும்பை இந்தியன்ஸ் வீரர் டிம் டேவிட்

ரூ.8.25 கோடிக்கு ஏலம் போன மும்பை இந்தியன்ஸ் வீரர் டிம் டேவிட்

ஐபிஎல் மெகா ஏலம் 2022-ல் டிம் டேவிட் என்ற ஒரு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவருக்கு கடும் போட்டாப் போட்டி நிகழ்ந்தது, இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 159 ஆகும். அதனால்தான் இந்தப் போட்டி. அதே போல் மும்பை இந்தியன்ஸ் இங்கிலாந்து காய வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது.

மேலும் படிக்கவும் ...

    யார் டிம் டேவிட்?

    டிம் டேவிட் சிங்கப்பூரில் பிறந்த ஆஸ்திரேலிய வீரர். இவருக்கு வயது இப்போது 26. வலது கை பேட், வலது கை ஆஃப் பிரேக். இவர் சிங்கப்பூருக்கு ஆடியுள்ளார். பிறகு ஹோபார்ட் ஹரிகேன்ஸ், லாகூர் குவாலாண்டர்ஸ், முல்டான் சுல்தான்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், ஆர்சிபி, செயிண்ட் லூசியா கிங்ஸ், சரே, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா லெவன் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார்.

    14 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடி 558 ரன்கள் எடுத்துள்ளார். 92 அதிகபட்ச ஸ்கோர். சராசரி 46.50. ஸ்ட்ரைக் ரேட் 158.52. மொத்தமாக 85 டி20 போட்டிகளில் 1908 ரன்களை 159.39 என்ற சராசரியில் எடுத்துள்ளார். காட்டடி தர்பார் மன்னன். நல்ல பீல்டர் ஒரு இன்னிங்சில் அதிகமாக 4 கேட்ச்களை எடுத்துள்ளார்.
    இங்கிலாந்தின் பிளாஸ்ட் டி20-யில் லங்காஷயர் அணிக்கும் ஆடியுள்ளார்.

    Also Read: IPL 2022 CSK: சிஎஸ்கே-வுக்கு கிடைத்து விட்டார் இன்னொரு மைக் ஹஸ்ஸி - ஆம்! டெவன் கான்வே சென்னை வீரர்

    இதே ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.1.5 கோடிக்கு மிட்செல் சாண்ட்னரை ஏலம் எடுத்தது. அதே போல் சிஎஸ்கே முகேஷ் சவுத்ரியையும் ஏலம் எடுத்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, IPL Auction

    அடுத்த செய்தி