Home /News /sports /

IPL Acution 2022: அதிர்ச்சி! சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் ஏலம் போகவில்லை- ராபின் உத்தப்பா, பிராவோ சிஎஸ்கே அணியில்

IPL Acution 2022: அதிர்ச்சி! சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் ஏலம் போகவில்லை- ராபின் உத்தப்பா, பிராவோ சிஎஸ்கே அணியில்

ட்வைன் பிராவோ- சிஎஸ்கே

ட்வைன் பிராவோ- சிஎஸ்கே

ஐபிஎல் 2022 ஏலத்தின் அதிர்ச்சிகரமாக சிஎஸ்கே அணிக்காக இத்தனையாண்டுகளாக ஆடிய சுரேஷ் ரெய்னா விற்காமல் போனார், அவரது அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஒருவேளை பின்னால் இந்த விலையை விடவும் குறைவாக அவர் ஏலம் எடுக்கப்படலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஐபிஎல் 2022 ஏலத்தின் அதிர்ச்சிகரமாக சிஎஸ்கே அணிக்காக இத்தனையாண்டுகளாக ஆடிய சுரேஷ் ரெய்னா விற்காமல் போனார், அவரது அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஒருவேளை பின்னால் இந்த விலையை விடவும் குறைவாக அவர் ஏலம் எடுக்கப்படலாம்.

    இந்த சுற்றில் ஸ்டீவ் ஸ்மித், ரெய்னா, டெவிட் மில்லர், ஷாகிப் அல் ஹசன் விற்கவில்லை. ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு எளிதில் தக்கவைத்தது, யாரும் இவருக்கு போட்டியிடவில்லை, பிராவோவுக்கு டெல்லி அணி கடுமையாக மோதியது, ஆனால் கடைசியில் விலையை ஏற்றி விட்டு ரூ.4.40 கோடியில் பின் வாங்க சிஎஸ்கே பிராவோவை தக்கவைத்தது.

    பெரிய ஏமாற்றம் சுரேஷ் ரெய்னாதான், 205 ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்களுக்கும் மேல் அடித்தவர் முதல்சுற்றில் விற்காமலே போனார். இது அவருக்கு பெரிய ஏமாற்றமாகவே இருக்கும்.

    ஆஸ்திரேலிய லெஜண்ட் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க ஆளில்லை. ரெய்னா போலவே அவரை ரிக்கி பாண்டிங் உள்ள டெல்லியும் கைவிட்டது, ராஜஸ்தானும் கைவிட்டது.

    நிதிஷ் ராணா ரூ.8 கோடிக்கு கொல்கத்தா அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார். தேவ்தத் படிக்கல் ரூ.7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஜேசன் ராய் ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸுக்கு சென்றார். ஹெட்மையருக்கு அடித்தது லக்கி பிரைஸ் அவர் ரூ.8.5 கோடிக்கு ராயல்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்.

    மணீஷ் பாண்டே ரூ4.6 கோடிக்கு லக்னோ அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dwayne Bravo, IPL 2022, IPL Auction, Raina

    அடுத்த செய்தி