Home /News /sports /

IPL 2022 CSK: சிஎஸ்கே-வுக்கு கிடைத்து விட்டார் இன்னொரு மைக் ஹஸ்ஸி - ஆம்! டெவன் கான்வே சென்னை வீரர்

IPL 2022 CSK: சிஎஸ்கே-வுக்கு கிடைத்து விட்டார் இன்னொரு மைக் ஹஸ்ஸி - ஆம்! டெவன் கான்வே சென்னை வீரர்

சிஎஸ்கே அணியில் இன்னொரு மைக் ஹஸ்சி, அவர்தான் டெவன் கான்வே.

சிஎஸ்கே அணியில் இன்னொரு மைக் ஹஸ்சி, அவர்தான் டெவன் கான்வே.

டெஸ்ட், ஒருநாள், டி20 அரங்கில் எழுந்துள்ள புதிய நட்சத்திரம், நியூசிலாந்து தொடக்க வீரர்தான் இடது கை பேட்டர், விக்கெட் கீப்பர் டெவன் கான்வே. இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.1 கோடி விலைக்கு ஏலம் எடுத்தது.

    அவர் ஏலம் எடுத்த தொகையை விட மதிப்பு மிக்க வீரர். சிஎஸ்கேவுக்கு எப்படி ஒரு ஆஸ்திரேலியாவின் மிஸ்டர் கிரிக்கெட் மைக் ஹஸ்ஸி இருந்தாரோ, அதே போல் இப்போது நியூசிலாந்தின் டெவன் கான்வே வந்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இங்கிலாந்தில் அறிமுகத்திலேயே இரட்டைச் சதம் விளாசியவர். மிகவும் அனுபவமிக்கவர், காடெங், டால்பின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு நட்டால் இன்லான்ந்துக்கு ஆடியுள்ளார், இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஆனால் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து ரொம்ப காலம் ஆகிறது.

    5 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் 2 அரைசதங்கள் உட்பட 623 ரன்கள் விளாசியுள்ளார், அதற்குள்ளாகவே இவர்து அதிகபட்ச ஸ்கோர் 200 ஆகும். சராசரி 69.22, 3 ஒருநாள் போட்டிகளில் 225 ரன்களை 75 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதிகபட்சம் 126, 20 டி20 சர்வதேச போட்டிகளில் 602 ரன்கள் சராசரி 50.16. அதிபட்ச ஸ்கோர் 99 நாட் அவுட்.

    இதுவரை 115 டி20 போட்டிகளில் 3,765 ரன்கள் குவித்துள்ளார். 3,765 ரன்கள். 43.77 சராசரி. 105 நாட் அவுட் அதிகபட்ச ஸ்கோர்.

    சிஎஸ்கே உண்மையில் வெரி லக்கி என்றுதான் கூற வேண்டும், இவரை இழந்த அணிகள் நிச்சயம் இவரை சிஎஸ்கேவுக்கு விட்டதற்காக நிச்சயம் வருந்தவே செய்யும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, IPL Auction

    அடுத்த செய்தி