ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சிஎஸ்கே அணியில் இன்னொரு மஹீ... - யார் இந்த மஹீஷ் தீக்‌ஷனா?

சிஎஸ்கே அணியில் இன்னொரு மஹீ... - யார் இந்த மஹீஷ் தீக்‌ஷனா?

சிஎஸ்கேவின் இலங்கை ஸ்பின்னர் மஹீஸ்ஹ் தீக்‌ஷனா

சிஎஸ்கேவின் இலங்கை ஸ்பின்னர் மஹீஸ்ஹ் தீக்‌ஷனா

சிஎஸ்கே அணி ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளான இன்று இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷனா என்பவரை ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. இவருக்கு வயது 22. வலது கை ஆஃப் ஸ்பின்னர். வலது கை பேட்ஸ்மென்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சிஎஸ்கே அணி ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளான இன்று இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷனா என்பவரை ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. இவருக்கு வயது 22. வலது கை ஆஃப் ஸ்பின்னர். வலது கை பேட்ஸ்மென்.

  இவரது முழுப்பெயர் மொரவககே மஹீஷ் தீக்‌ஷனா (Morawakage Maheesh Theekshana)

  இலங்கை பிரீமியர் லீகில் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு ஆடியவர். இலங்கை அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளையும் 11 டி20 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 15 லிஸ்ட் ஏ போட்டிகளில் 24 விக்கெட்டுகளையும் 44 டி20 போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார், இவரது சிறப்புத் தன்மை என்னவெனில் சிக்கனவிகிதம் ஓவருக்கு 6 ரன்கள்தான்.

  ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் டி20 சர்வதேச போட்டியில் அதிகபட்சம் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மற்ற டி20 களில் 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

  இளம் வீரர், பவுலர், ஆனால் அனுபவத்தை நம்பும் இவரை சிஎஸ்கே பயன்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022, IPL Auction