சென்னையில் IPL ஏலத்தில் கலந்துகொண்ட ஷாருக் கான் மகன் ஆர்யன்!

சென்னையில் IPL ஏலத்தில் கலந்துகொண்ட ஷாருக் கான் மகன் ஆர்யன்!

ஷாருக் கான் மகன் ஆர்யன்

பொதுவாக கொல்கத்தா அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ஆர்யன் கட்டாயம் கலந்துகொள்ளும் வழக்கம் உடையவர் தான் என்றாலும் ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அவர் கலந்து கொண்டது இல்லை

  • Share this:
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மூத்த மகன் ஆர்யன் கலந்து கொண்டார்.

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 8 அணிகளின் நிர்வாகிகள் வீரர்களை ஏலம் எடுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த ஏலத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் கிங் கான் என புகழப்படும் ஷாருக் கானின் மகன் ஆர்யனும் கலந்து கொண்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் ஐபிஎல் தொடரில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் டேபிளில் அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர், ஜெய் மேத்தா, துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோருடன் ஆர்யனும் அமர்ந்திருந்தார்.

ஷாருக் கான் மகன் ஆர்யன்


பொதுவாக கொல்கத்தா அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ஆர்யன் கட்டாயம் கலந்துகொள்ளும் வழக்கம் உடையவர் தான் என்றாலும் ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அவர் கலந்து கொண்டது இல்லை, முதல் முறையாக சென்னையில் நடைபெறும் நடப்பு ஆண்டுக்கான தொடருக்கான ஏலத்தில் தான் ஆர்யன் கலந்து கொண்டுள்ளார். வெள்ளை சர்ட் அணிந்திருந்த ஆர்யன் முகத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்திருந்தார்.

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளையும் தொடர உள்ளது. இந்த ஏலத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச தொகைக்கு தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆனார் தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இதே போல இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தவிர சத்தேஸ்வர் புஜாராவை அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கும், கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா கெளதமை ரூ.9.25 கோடிக்கும், கோவையை சேர்ந்த ஹரி நிஷாந், ஹரி சங்கர் ரெட்டி, பகத் வர்மாவை ரூ.20 லட்சத்துக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
Published by:Arun
First published: