IPL Auction 2021 Live updates: கிறிஸ் மோரிஸ்- ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

8 அணிகளும் சேர்ந்து 139 வீரர்களை தக்கவைத்துள்ளன, 57 வீரர்களை கழட்டிவிட்டுள்ளனர். இந்த கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக தேவையான வீரர்களை தேர்வு செய்வதற்காக எட்டு அணிகளும் ஏலத்தில் பங்கேற்க தயார்நிலையில் உள்ளனர்.

  • News18 Tamil
  • | February 18, 2021, 17:16 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:38 (IST)

    இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் சாம் பில்லிங்ஸ்-ஐ டெல்லி அணி ரூ 2 கோடிக்கு ஏலம் எடுத்தது!

    20:21 (IST)

    சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது!

    20:15 (IST)

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வீரர் முஜிபுர் ரஹ்மானை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ1.5 கோடிக்கு ஏலம் எடுத்தது!

    20:13 (IST)

    தமிழகத்தைச் சேர்ந்த ஹரி நிஷாந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது!

    20:13 (IST)

    ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ2 கோடிக்கு ஏலம் எடுத்தது !

    20:0 (IST)

    இந்திய வீரர் கேதர் ஜாதவை அடிப்படை விலையான ரூ 2 கோடியிலேயே சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது!

    19:52 (IST)

    ஆஸ்திரேலிய வீரர் மோய்சஸ் ஹென்ரிக்சை பஞ்சாப் அணி ரூ 4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது!

    வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபேபியன் ஆலனைன் பஞ்சாப் அணி ரூ 75 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது!

    19:41 (IST)

    தமிழகத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் பெரியசாமியை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை!

    19:38 (IST)

    ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியனை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ 4.80 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது!

    நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் களைகட்டி வருகிறது. ஏலத்தில் பங்கேற்றுள்ள முக்கிய வீரர்கள் யார் யார்? எட்டு அணிகளுக்கும் கையிருப்பு எவ்வளவு உள்ளது? வீரர்களில் யாருக்கு அதிக போட்டி? அனைத்தையும் விரிவாக காணலாம்.