ஐபிஎல் 2021 டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது இதில் முதலில் பேட்ஸ்மென்களுக்கான ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ரூ.2.2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
முதலில் ஆஸ்திரேலியா அவரை ஒரு தொகைக்கு ஏலம் கேட்டது, ஆனால் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்மித்தை ஏலம் எடுத்துள்ளது.
தொடக்கத்தில் முச்சத நாயகன் கருண் நாயர் ரூ.50 லட்சம் தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டார், ஆனால் அவரை எடுக்க ஆளில்லை. அதே போல்தான் இங்கிலாந்தின் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் விற்கப்படாமல் போனார்.
அதே போல் இங்கிலாந்தின் வெள்ளைப்பந்து சர்வதேச தொடக்க வீரர் ஜேசன் ராய் விற்கப்படவில்லை. மே.இ.தீவுகளின் அதிரடி வீரர் எவின் லூயிஸ் விற்கப்படாமல் போனார்.
ஆஸ்திரேலியாவின் ஏரோன் பிஞ்ச் விற்கப்படவில்லை. இவரது அடிப்படை விலை ரூ.1 கோடி.
சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்த ஹனுமா விஹாரியின் அடிப்படை விலை ரூ. 1 கோடி, எடுக்க ஆளில்லை.