ஐபிஎல் 2021 ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை கோலி தலைமை ஆர்சிபி அணி ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சிஎஸ்கே அணிக்கும் ஆர்சிபிக்கும் கிளென் மேக்ஸ்வெலை எடுக்க கடும் போட்டி நிலவியது. கிளென் மேக்ஸ்வெல்லின் அடிப்படை விலை ரூ.2 கோடி மட்டுமே. இந்நிலையில் அவரை முதலில் கொல்கத்தா ரூ.3 கோடிக்கு கேட்டது.
ஆர்சிபி உள்ளே நுழைந்து 4 கோடி என்றது. சிஎஸ்கே உள்ளே நுழைந்து ரூ.5.5 கோடிக்குக் கேட்டது. பிறகு ரூ.6.5 கோடியாக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆர்சிபிக்க்கும் சிஎஸ்கேவுக்கும் பெரிய போட்டி எழ, கிளென் மேக்ஸ்வெலின் விலை ரூ.10 கோடி ஆனது. இதோடு விட்டதா? ஆர்சிபி 11.25 கோடி எனக் கேட்க சென்னை 11.50 கோடி என்றது. இப்படியே 12.75 கோடி, 13 கோடி என்று போய் கடைசியில் 14 கோடிக்கு சிஎஸ்கே முடிக்கலாம் என்று பார்த்தது,
ஆனால் ஆர்சிபி கடைசியில் ரூ.14.25 லட்சம் என்று ஏற்றியது, சென்னை பின் வாங்கியது கிளென் மேக்ஸ்வெல் 14.25 லட்சம் கோடிக்கு ஜாக்பாட் அடிக்க ஆர்சிபி அணி அவரை ஏலம் எடுத்தது.
கடந்த முறை கிளென் மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் கிங்ஸ் லெவன் அணியில் ஆடி வெறும் 108 ரன்களையே எடுத்து சொதப்பியவருக்கு இந்த முறை வந்தது வாழ்வு.
ஏனெனில் இந்தியாவுக்கு எதிராக அங்கு நாம் சென்றிருந்த போது வெளுத்து வாங்கினார் கிளென் மேக்ஸ்வெல் இதனையடுத்து அவரது விலை கடுமையாக உயர்ந்தது.