IPL Auction 2021: ஏலத்தில் ஸ்டீபன் ஃப்ளெமிங், எம்எஸ் தோனி பங்கேற்கிறார்களா? சிஎஸ்கே அணி உரிமையாளர் வெளியிட்ட தகவல்!

எம்எஸ் தோனி

சி.எஸ்.கே கடந்த ஆண்டு ஒரு மறக்கமுடியாத ஐபிஎல் சீசனை கொண்டிருந்தது. கடந்த போட்டிகளில் மோசமான செயல்திறனை காட்டியதால், புள்ளிகள் அட்டவணையில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

  • Share this:
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ஐபிஎல் ஏலத்தில் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் கேப்டன் எம்.எஸ். தோனி கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் டிஜிட்டல் ஊடகம் மூலம் கலந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

InsideSport உடன் பேசிய காசி விஸ்வநாத், “ஃப்ளெமிங் மற்றும் தோனி ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வரவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில், தொடர்ந்து இணைந்திருக்க பல இணைய வசதிகள் உள்ளன. எனவே அவர்கள் எங்களுடன் டிஜிட்டல் முறையில் இணைந்திருப்பார்கள் எனக்கூறியுள்ளார். சி.எஸ்.கே கடந்த ஆண்டு ஒரு மறக்கமுடியாத ஐபிஎல் சீசனை கொண்டிருந்தது. கடந்த போட்டிகளில் மோசமான செயல்திறனை காட்டியதால், புள்ளிகள் அட்டவணையில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரரும், ஐபிஎல் பட்டத்தை வென்ற கேப்டன்களில் ஒருவருமான கவுதம் கம்பீர் கூறியதாவது, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சனுக்கு பதிலாக வேறுறொரு நபரை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல டுவைன் பிராவோவும் தற்போது ஆட்டத்தின் சுறுசுறுப்பை இழந்து விட்டார். எனவே அணி நிர்வாகம் அவருக்கு மாற்றாக ஒருவரை எடுக்கும் என்று அவர் கூறினார்.

ஸ்டார் ஸ்போர்ட்டின் Cricket Connected நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், "சிஎஸ்கே அணி மிக முக்கியமாக, ஷேன் வாட்சனுக்கு மாற்றாக ஒருவரை அணியில் எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும், அவர்கள் சுரேஷ் ரெய்னாவை அணியில் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்த முறை அணியில், சுரேஷ் ரெய்னா இருப்பதால் கூடுதல் பலம் இருக்கும். இந்த ஆண்டு ஏலத்தில் சி.எஸ்.கே பற்றி மட்டுமே அனைவரும் பேசுகிறோம். ஏனெனில் அவர்கள் கடந்த ஆண்டு பிளேஆஃப்களில் முதல் முறையாக தகுதி பெறவில்லை. அதனால்தான் இந்த அணி குறித்து நிறைய பேச்சு இருக்கிறது.

அதனால்தான் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் விளையாடும் போது, அணியின் வலிமையை எப்போதும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. மேலும், சென்னை அணியில் ஹர்பஜன் சிங் மற்றும் பியூஸ் சாவ்லா வெளியேற்றப்பட்ட நிலையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை அந்த அணி தேர்வு செய்யலாம். அவர் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டையும் கவர் செய்துவிடுவார். மேலும் தோனிக்கும் ஆஃப் ஸ்பின்னர்களை மிக பிடிக்கும்" எனவும் கம்பீர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற உள்ள ஏலத்தில் சி.எஸ்.கே அணி 6 வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: