வரலாறு படைத்த கிறிஸ் மோரிஸ்- ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

வரலாறு படைத்த கிறிஸ் மோரிஸ்- ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

கிறிஸ் மோரிஸ்

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆனார் தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

 • Share this:
  ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆனார் தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

  கடந்த ஆண்டு ஆர்சிபி அணி இவரை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த முறை 12 விக்கெட்டுகளை எடுத்த கிறிஸ் மோரிஸ் வெறும் 34 ரன்களையே எடுத்தார், அவருக்கு இந்த விலை.

  இதுவரை ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் ஒரே ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதில்லை, இந்த வகையில் கிறிஸ் மோரிஸ் யுவராஜ் சிங்கையும் கடந்து சென்றார்.

  யுவராஜ் சிங் 2015 ஆம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்தால் ரூ .16 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும், யுவராஜ் சிங்கிற்கு இது ஒரு சிறந்த சீசனாக இல்லை. அந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய யுவராஜ், வெறும் 248 ரன்களையும் 19.07 சராசரியையும், 118.09 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டு அரைசதங்களையும் பெற்றார்.

  இதற்கு அடுத்த இடத்தில் பாட் கம்மின்ஸ் - 2020ல் ₹15.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. பென் ஸ்டோக்ஸ் - 2017ல் ₹14.5 கோடி (ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்)ஐபிஎல் ஏல வரலாற்றில் பென் ஸ்டோக்ஸ் 2017ம் ஆண்டில் ரூ .14.5 கோடிக்கு புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டபோது மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரராக இருந்தார்.

  யுவராஜ் சிங்கை மீண்டும் ₹14 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2014-ம் ஆண்டு வாங்கியது.

  பென் ஸ்டோக்ஸ் 2018-ல் ராஜஸ்தான் அணி ரூ.12.5 கோடிக்கு வாங்கியது.

  2014-ல் டெல்லி அணி தினேஷ் கார்த்திக்கை ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

  இப்போது அனைத்து சாதனைகளையும் உடைத்து 16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: