ஐபிஎல் மினி ஏலத்தை நினைத்து பதற்றம் அடைந்ததாகவும், இரவு தூங்கவில்லை என்றும் ஆல் ரவுண்டர் சாம் கரன் கூறியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக சாம் கரன் தற்போது மாறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரையொட்டி கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நேற்று நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் ரூ. 18.50 கோடிக்கு இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சாம், தனது அதிரடி பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சால் கிரிக்கெட் உலகை கவர்ந்தார். இந்நிலையில், மிகவும் மதிப்பு வாய்ந்த ஐபிஎல் ஆட்டக்காரராக 24 வயதாகும் சாம் தற்போது மாறியுள்ளார்.
‘சி.எஸ்.கே. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படலாம்…’ – நியூஸி. முன்னாள் வீரர் கணிப்பு
இந்நிலையில் ஐபிஎல் மினி ஏலம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி கவனம் ஈர்த்து வருகிறது. டிவி சேனல் ஒன்று சாம் கரன் அளித்த பேட்டியில் கூறியதாவது-
ஏலம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவில் நான் தூங்கவில்லை. மினி ஏலத்தை நினைத்து எனக்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த அளவு தொகைக்கு நான் ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிகபட்ச தொகைக்கு என்னை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
CSK Playing XI : சிஎஸ்கே அணியில் விளையாட இருக்கும் 11 வீரர்கள் இவர்கள் தான்!
எனது ஐபிஎல் கெரியர் பஞ்சாப் அணியில்தான் ஆரம்பித்தது. தற்போது மீண்டும் அந்த அணிக்கு செல்கிறேன். இந்த ஐபிஎல் தொடரை நான் கூடுதல் நம்பிக்கையுடன் எதிர்கொள்வேன். உலகக்கோப்பையில் நான் பெற்ற அனுபவம் ஐபிஎல் தொடரில் உதவியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL