முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023: சென்னை வந்த தல தோனி - மலர் தூவி வரவேற்ற ரசிகர்கள்!

IPL 2023: சென்னை வந்த தல தோனி - மலர் தூவி வரவேற்ற ரசிகர்கள்!

தோனி

தோனி

விமான நிலையத்திலிருந்து தனியார் ஓட்டலுக்கு செல்லும் மகேந்திர சிங் தோனி வரும் நாட்களில் சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இம்மாதம் 31-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. போட்டிக்காக தயாராகும் வகையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 26 பேர் பல்வேறு விமானங்களில் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லியில் இருந்து பயணிகள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியை பூக்கள் தூவி மேல தாளத்துடன் சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து தனியார் ஓட்டலுக்கு செல்லும் மகேந்திர சிங் தோனி வரும் நாட்களில் சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில சீசன்களாக ஐபிஎல் போட்டிகள் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே நடைபெற்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் சிஎஸ்கே விளையாடவுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்.

First published:

Tags: CSK, IPL 2023, MS Dhoni