ஐபிஎல் ஏலத்தில் ரூ. 18.50 கோடிக்கு ஆல்ரவுண்டர் சாம் கரனை வாங்கியது குறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ்வாடியா விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரையில்லாத அளவுக்கு ரூ. 18.50 கோடிக்கு இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். பலத்த போட்டிக்கு மத்தியில் பஞ்சாப் அணி நிர்வாகம், சாம் கரனை கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம, பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது உள்ளிட்டவைகளால் சாம் கரன் மீதான டிமாண்ட் அதிகரித்திருந்தது. அந்த வகையில், கைவசம் ரூ. 32.20 கோடி வைத்திருந்த பஞ்சாப் அணி, சாமுக்காக ரூ. 18.50 கோடியை காலி செய்துள்ளது.
IPL Auction 2023 : அப்போ வலிமை... இப்போ துணிவு... சிஎஸ்கே ட்வீட் வைரல்
கையில் குறைவான தொகை இருந்தாலும் ஒரு வீரருக்கு இவ்வளவு செலவு செய்யலாமா? சாம் கரன் அதிக தொகைகு வாங்கப்பட்டுள்ளார் உள்ளிட்ட விமர்சனங்கள் பஞ்சாப் அணி மீது எழத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஏலம் குறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ்வாடியா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது-
அணி சம பலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். நாங்கள் இதுவரை வாங்கிய வீரர்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றனர். எங்கள் அணிக்கு சாம் கரன் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஐபிஎல் ஏலத்தில் அயர்லாந்து வீரருக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.. யார் இந்த ஜோஷ்வா லிட்டில்?
சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை ரூ. 7.50 கோடிக்கு வாங்கினோம். பின்னர் அவர் சென்னை அணிக்கு சென்று சிறப்பாக விளையாடினார். 24 வயதே ஆகியிருக்கும் சாம் உலகத்தரமான விளையாட்டு வீரர். இந்த சின்ன வயதில் அவர் 140 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவற்றை கவனத்தில் கொண்டு அவரை ஏலத்தில் எடுத்தோம். ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசாவையும் அணியில் எடுத்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம கரன் இன்று ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக 2021 ஏலத்தில் தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL