ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2013 AUCTION : மும்பை இந்தியன்ஸில் பொல்லார்டு இடத்தை நிரப்பும் வீரர் யார்?

IPL 2013 AUCTION : மும்பை இந்தியன்ஸில் பொல்லார்டு இடத்தை நிரப்பும் வீரர் யார்?

கீரோன் பொல்லார்ட்

கீரோன் பொல்லார்ட்

தற்போது மும்பை இந்தியன்ஸ் கைவசம் ரூ. 20.55 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரோன் பொல்லார்டு நிரப்பப் போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வீரர்களை எடுக்க குறைவான தொகையை மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டிருப்பதால் என்ன மாதிரியான முடிவை அணி நிர்வாகம் எடுக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

16 ஆவது  ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதனையொட்டி மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ளது. 16ஆவது ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 74 போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்… 15 வீரர்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் கிரோன் பொல்லார்டு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2010ஆம் ஆண்டிலிருந்து பொலார்டு விளையாடி வந்தார்.

அடுத்த சீசனில் பொல்லார்டு இடம்பெறாத நிலையில், அவரது இடத்தை எந்த வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி நிரப்பும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி அன்று நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை அணியில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது இளம் வீரர் சாம் கர்ரனை மும்பை இந்தியன்ஸ் தனது அணியில் எடுக்கலாம்.

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்டில் படுதோல்வி… அதிருப்தியை வெளிப்படுத்திய பாக். கேப்டன்

தற்போது மும்பை இந்தியன்ஸ் கைவசம் ரூ. 20.55 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்த தொகைக்கு மூன்று வெளிநாட்டு வீரர்களை அணியில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோன்று ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே முக்கிய வேகப்பந்து வீச்சாளராக அணியில் இருக்கிறார். அந்த வகையில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் தேவையும் மும்பை அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய காரணங்களால் அணி நிர்வாகம் என்ன மாதிரியான முடிவை ஏலத்தின் போது எடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், ஆர்வத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது உள்ள வீரர்கள் –

ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ராமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்

First published:

Tags: IPL, Mumbai Indians