IPL 2023 AUCTION : 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதனையொட்டி மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ளது. 16ஆவது ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 74 போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய வீரர்கள்
இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
IPL 2013 AUCTION : மும்பை இந்தியன்ஸில் பொல்லார்டு இடத்தை நிரப்பும் வீரர் யார்?
கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளியன்று நண்பகல் 12.30 க்கு மினி ஏலம் தொடங்குகிறது. வீரர்களின் தேர்வைப் பொருத்து ஏலம் இரவு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதில் பார்க்கலாம்?
ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்கலாம். ஏலம் நடைபெறும் நிழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிவி சேனல்களிலும், ஜியோ சினிமா ஆப்-யிலும் நேரலையாக பார்க்கலாம்.
அடிப்படை ஏலத்தொகை ரூ. 2 கோடி மதிப்புள்ள வீரர்கள்-
டாம் பான்டன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரெய்க் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், கேன் வில்லியம்சன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரிலீ ரோஸோவ், டெர் டுசென், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன்
அடிப்படை ஏலத்தொகை ரூ. 1.5 கோடி மதிப்புள்ள வீரர்கள்-
சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், நாதன் கோல்டர்-நைல்
அடிப்படை ஏலத்தொகை ரூ. 1 கோடி மதிப்புள்ள வீரர்கள்-
மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வூட், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்ரிச் குஸ்ஸால் பெரஸென், ரோஸ்ஸால் பெராசென், ரோஸ்ஸால் பெராசென், சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், டேவிட் வைஸ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL