ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2023 Auction : 3 ஆல்ரவுண்டர்களை குறி வைக்கும் ஐபிஎல் அணிகள்…

IPL 2023 Auction : 3 ஆல்ரவுண்டர்களை குறி வைக்கும் ஐபிஎல் அணிகள்…

ஐபிஎல்

ஐபிஎல்

IPL 2023 Auction : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் 2023-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 3 ஆல் ரவுண்டர்கள் மீது ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டியுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொருத்தளவில் ஆல்ரவுண்டர்கள் ஆட்டத்தின் மீது முக்கிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள். 4 ஓவர்கள் வீசி, அணிக்கு 30-40 ரன்களை அவர்கள் அதிரடியாக சேர்த்தாலே, அது அணிக்கு மிகப்பெரும் பங்களிப்பாக அமைந்து விடும்.

இதன் காரணமாக பேட்ஸ்மேன், பவுலர்களை விடவும் அணி நிர்வாகம் பெரும்பாலும் அல்ரவுண்டர்களை அணியில் எடுக்க ஆர்வம் காட்டும். அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் ஏலத்தில் 3 ஆல்ரவுண்டர்கள் கவனம் பெறுகிறார்கள்.

பென் ஸ்டோக்ஸ் – 

இங்கிலாந்தை சேர்ந்த பென்  ஸ்டோக்ஸிற்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவரை 2018 ஏலத்தின்போது ராஜஸ்தான் அணி ரூ. 12.5 கோடிக்கு எடுத்திருந்தது.

தற்போதைய டி20 கிரிக்கெட் உலகில் அதிக மதிப்புள்ள வீரராக பென் ஸ்டோக்ஸ் கருதப்படுகிறார்.

டான் பிராட்மேன் சாதனையை முறிடியத்த புஜாரா… வங்கதேச டெஸ்டில் புதிய சாதனை

கேப்டனாகவும் ஸ்டோக்ஸை நியமிக்கலாம் என்பதால் இன்றை ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு இவர் அணியில் எடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

சாம் கரன்

இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு வீரரான சாம் கரனுக்கும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு சாம் கரன் முக்கிய காரணமாக இருந்தார்.

4 ஓவர்களை அபாரமாக வீசக்கூடிய இவரால், பேட்டிங்கில் ஒரேயொரு ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை உண்டு. சென்னை அணியில் இடம்பெற்று பலமுறை சாம் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

IPL Auction Live: இன்று நடைபெறுகிறது ஐபிஎல் 2023 ஏலம்!

ஷகிப் அல் ஹசன்

வங்கதேச ஆல்ரவுண்டரான ஷகில், கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் மிக்கவர். அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங்கில் மாற்றம் செய்து விளையாடும் திறமை இவருக்கு உண்டு.

4 ஓவர்களை எளிதாக வீசி விடுவார். கேப்டனாக வங்கதேச அணியை வழிநடத்திய அனுபவமும் இருப்பதால் இவருக்கும் கேப்டன் அல்லது துணை கேப்டன் பொறுப்பு அளிக்கப்படலாம்.

First published:

Tags: IPL