ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2023 AUCTION : வீரர்களை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகளிடம் மீதம் உள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

IPL 2023 AUCTION : வீரர்களை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகளிடம் மீதம் உள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

ஐ.பி.எல். 2023

ஐ.பி.எல். 2023

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐ.பி.எல் மினி ஏலம் வரும் வெள்ளியன்று நடைபெறும் நிலையில், வீரர்களை ஏலத்தில் எடுக்க ஒவ்வொரு அணியிலும் எவ்வளவு தொகை உள்ளது என்பதை, இந்த பதிவில் பார்க்கலாம்.

16ஆவது ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 74 போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2023 ஐ.பி.எல். மினி ஏலம் : எப்போது, எங்கு நடைபெறும்? எதில் பார்க்கலாம்? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் கொச்சியில் வரும் வெள்ளியன்று நண்பகல் 12.30 க்கு மினி ஏலம் தொடங்குகிறது. வீரர்களின் தேர்வைப் பொருத்து ஏலம் இரவு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்கலாம்.  ஏலம் நடைபெறும் நிழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் டிவி சேனல்களிலும், ஜியோ சினிமா ஆப்-யிலும் நேரலையாக பார்க்கலாம்.

IPL 2013 AUCTION : மும்பை இந்தியன்ஸில் பொல்லார்டு இடத்தை நிரப்பும் வீரர் யார்?

வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக ஒவ்வொரு அணியிலும் மீதம் உள்ள தொகை குறித்த பட்டியல்-

ஐபிஎல் அணிகள்மீதம் உள்ள தொகை
சன்ரைசர்ஸ் ஐதராபாத்ரூ. 42.25 கோடி
பஞ்சாப் கிங்ஸ்ரூ. 32.20 கோடி
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ரூ. 23.35 கோடி
மும்பை இந்தியன்ஸ்ரூ. 20.55 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 20.45 கோடி
டெல்லி கேபிடல்ஸ்ரூ. 19.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ்ரூ. 19.25 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 13.2 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருரூ. 8.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 7.05 கோடி

First published:

Tags: IPL