ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக் அதிக தொகைக்கு சன் ரைசர்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் தன் பக்கம் இந்த இளம் வீரர் திரும்ப வைத்திருக்கிறார். யார் இந்த ஹேரி ப்ரூக் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐபிஎல் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் தற்போது நடைபெற்று வருகிறது. ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். இவருக்கு ரூ. 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்க அணிகள் அதிகம் ஆர்வம் காட்டவிலை. அவரை கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அடுத்ததாக இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹேரி ப்ரூக் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆரம்ப விலையாக ரூ. 1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்… வங்கதேச டெஸ்டில் முன்னிலை பெற்றது இந்திய அணி…
ஒவ்வொரு அணியும் ஹேரியை வாங்க ஆர்வம் காட்டியதால், ரூ. 25 லட்சம் லட்சமாக அவருக்கான தொகை அதிகரித்துக் கொண்டே போனது. ரூ. 7 கோடியை தாண்டிய பின்னர் ராஜஸ்தான் அணி நிர்வாகமும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகமும் ஹேரியை எடுக்க போட்டி போட்டன. இரு அணிகளும் ரூ. 25 லட்சத்தை மாறி மாறி உயர்த்தியதால் அரங்கம் பரபரப்பானது.
கடைசியில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹேரியை ஏலத்தில் எடுத்தது.
23 வயதாகும் ஹேரி ப்ரூக் இங்கிலாந்து அணியில் விளையாடி வருகிறார். உலகில் மற்ற டி20 அணிகளிலும் ப்ரூக் இடம்பெற்றிருக்கிறார். இங்கிலாந்து அணிக்காக 20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹேரி ப்ரூக் 372 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 81 ரன்கள். சராசரி 26.57, ஸ்ட்ரைக் ரேட் 137.77.
முதல் தர போட்டிகளில் 99 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹேரி, 2432 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சம் 102 ரன்கள். சராசரி 33.77, ஸ்ட்ரைக் ரேட் 148.38.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 116 பந்துகளில் 153 ரன்களை எடுத்து ஹேரி சமீபத்தில் கவனம் பெற்றார். பேட்ஸ்மேனாக சர்வதேச அரங்கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்ததால், அவரை எடுப்பதற்கு அணிகள் ஆர்வம் காட்டின.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL