ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை வாங்கிய சி.எஸ்.கே…. ரசிகர்கள் உற்சாகம்

ஐபிஎல் மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை வாங்கிய சி.எஸ்.கே…. ரசிகர்கள் உற்சாகம்

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

IPL 2023 Auction : பரபரப்பான ஏலத்திற்கு மத்தியில் நேர்த்தியாக செயல்பட்ட சென்னை அணி நிர்வாகம், பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

CSK Ben Stokes : இன்றைய ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த சில ஆண்டுகளாக நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். கேப்டனாகவும் சில முறை பென் ஸ்டோக்ஸ் செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளதால் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் எதிர்பார்த்ததைப் போல் போட்டி போட்டன.

பரபரப்பான ஏலத்திற்கு மத்தியில் நேர்த்தியாக செயல்பட்ட சென்னை அணி நிர்வாகம், பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

அந்த வகையில் சென்னை அணி அதிகம் தொகை கொடுத்து வாங்கிய வீரராகவும் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார். முன்னதாக பவுலர் தீபக் சஹரை ரூ. 14 கோடிக்கு 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி எடுத்திருந்தது. அணியின் கேப்டன் தோனி ரூ. 12 கோடிக்கு அணியில் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார்.

ரூ. 13.25 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர்… யார் இந்த ஹேரி ப்ரூக்?

ஏலத்தில் சென்னை அணியில் எடுக்கப்பட்ட பின்னர், மஞ்சள் நிற ஃபோட்டோவை பென் ஸ்டோக்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது. சென்னை அணியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்… வங்கதேச டெஸ்டில் முன்னிலை பெற்றது இந்திய அணி…

31 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் 36 சர்வதேச டி20 இன்னிங்ஸில் விளையாடி 585 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன்கள் 52. ஸ்ட்ரைக் ரேட் 128.

ஐபிஎல் தொடரில் 42 இன்னிங்ஸ்களில் 920 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 107. ஸ்ட்ரைக் ரேட் 134.5

First published:

Tags: IPL