ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

18 வயது வீரரை ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்… யார் இந்த நிஷாந்த் சிந்து?

18 வயது வீரரை ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்… யார் இந்த நிஷாந்த் சிந்து?

நிஷாந்த் சிந்து

நிஷாந்த் சிந்து

இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 18 வயது பேட்ஸ்மேன் நிஷாந்த் சிந்துவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது. இவர் யார் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிஷாந்த் சிந்து அண்டர் 19 (19 வயதுக்கு உட்பட்டோர்) இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அண்டர் 19 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நிஷாந்த் சதம் அடித்து அசத்தினார்.

அரியானாவை சேர்ந்த நிஷாந்த முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கவனம் பெற்றவர். 2021 டிசம்பரில் அண்டர் 19 பிரிவில் சர்வதேச போட்டியில் இவர் அறிமுகம் ஆனார். இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச நாடுகளுடன் விளையாடிய அனுபவமும் நிஷாந்துக்கு உள்ளது.

ஐபிஎல் ஏலம் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்

இந்நிலையில் நிஷாந்த் சிந்துவை ரூ. 60 லட்சம் தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஆல் ரவுண்டராக இவர் இருப்பதால் அணிக்கு பலம் சேர்ப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இதேபோன்று அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ஷேக் ரஷீதையும் சென்னை அணி வாங்கியுள்ளது.

இதேபோன்று டி20 ஸ்பெஷலிஸ்டாக கருதப்படும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சுட்டிக்குழந்தை சாம் கரன்

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் ரூ. 18.50 கோடிக்கு அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.

சென்னை அணியின் வீரர்கள் தேர்வு திருப்திகரமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: IPL