ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022- சில வேளைகளில் நாம் நம் ஈகோவை கஷ்டப்பட்டு கைவிடுவது அவசியம் - ஜாஸ் பட்லர்

IPL 2022- சில வேளைகளில் நாம் நம் ஈகோவை கஷ்டப்பட்டு கைவிடுவது அவசியம் - ஜாஸ் பட்லர்

ஆரஞ்சு தொப்பி ஜாஸ் பட்லர்

ஆரஞ்சு தொப்பி ஜாஸ் பட்லர்

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 முதல் குவாலிபையர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சின் அதிரடி மன்னன், ஆரஞ்சுத் தொப்பிக்காரன் ஜாஸ் பட்லர் சரியாகத் தொடங்கவில்லை, அது குறித்து அவர் கூறிய போது சில சமயங்களில் நாம் நம் ஈகோவை சிரமப்பட்டு விழுங்கிக் கொள்ளத்தான் வேண்டும், பதற்றம் அடையக்கூடாது நிற்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 முதல் குவாலிபையர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சின் அதிரடி மன்னன், ஆரஞ்சுத் தொப்பிக்காரன் ஜாஸ் பட்லர் சரியாகத் தொடங்கவில்லை, அது குறித்து அவர் கூறிய போது சில சமயங்களில் நாம் நம் ஈகோவை சிரமப்பட்டு விழுங்கிக் கொள்ளத்தான் வேண்டும், பதற்றம் அடையக்கூடாது நிற்க வேண்டும்.

  15 ஐபிஎல் போட்டிகளில் 715 ரன்களை எடுத்த ஜாஸ் பட்லர் ஆரஞ்சு தொப்பிக்குச் சொந்தக் காரர். அன்று குஜராத்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் 47 ரன்களை 26 பந்துகளில் வெளுத்து வாங்க பட்லர் தன் முதல் 38 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் திடீரென உக்கிரமடைந்து அடுத்த 18 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இதுதான் ராஜஸ்தான் ராயல்ஸை 188/6க்குக் கொண்டு சென்றது, ஆனால் இவர் முதல் 38 பந்துகளில் 50 ரன்களையாவது எடுத்திருந்தால் ராஜஸ்தான் 200 ரன்களைக் கடந்திருக்கும் குஜராத்தினால் விரட்ட முடிந்திருக்காது.

  இது தொடர்பாக ஜாஸ் பட்லர் கூறும்போது, “அங்கு எப்படியாவது நின்று விட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இது எங்களுக்கு பெரிய போட்டி எனவே பெரிய ஸ்கோரை எடுக்க திட்டமிட்டோம். சில வேளைகளில் நாம் நம் ஈகோவை விழுங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அது கடினமாக இருந்தால் கடினமாகவே இருக்கட்டும். நான் எதையும் வலியப் புகுத்திக் கொள்வதில்லை, ஆனால் பதட்டம் அடையக் கூடாது.

  எதிரணியினர் நான் பதற்றமடைந்து அவுட் ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால் அங்கு எப்படியாவது நின்று விட வேண்டும் என்பதே அன்றைய குறிக்கோள். என்னை நான் நம்பினேன், எப்படியும் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆட்டம் மேம்படும் என்று எனக்குத் தெரியும், அது கடைசி நேரத்தில்தான் வந்தது.

  தொடக்கத்தில்கஷ்டப்பட்டேன், அப்போது சஞ்சு சாம்சன் வந்து முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்கினார். என் மீதான அழுத்தத்தை விடுவித்தார் சஞ்சு. இதனை என் பாணி இன்னிங்ஸ் என்று கூற மாட்டேன், ஆனால் நிற்க வேண்டும் என்று தோன்றியது.

  டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியாவின் 106 ரன் பார்ட்னர்ஷிப்பை எங்களால் உடைக்க முடியவில்லை. போட்டியில் தோற்றாலும் இன்னும் இறுதி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. ஏமாற்றம்தான் ஆனால் இன்னும் வாய்ப்பிருக்கிறது” என்றார் பட்லர்.

  நாளை 27ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் அகமதாபாத்தில் எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றனர், வெல்லும் அணி குஜராத்துடன் மே 29 அன்று இதே மைதானத்தில் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் விளையாடும்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Rajasthan Royals