Home /News /sports /

IPL 2022: டெல்லியின் பிளே ஆப் வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே? இன்று 2 லீக் ஆட்டங்கள்

IPL 2022: டெல்லியின் பிளே ஆப் வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே? இன்று 2 லீக் ஆட்டங்கள்

சிஎஸ்கே- டெல்லி கேபிட்டல்ஸ்

சிஎஸ்கே- டெல்லி கேபிட்டல்ஸ்

சி.எஸ்.கே அணி 10 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால் பிளே ஆப் செல்ல வாய்ப்பே இல்லை என்று முடிவாகிவிட்டது. இதனால் இனி வரக்கூடிய போட்டிகள் அனைத்தும் சம்பிரதாய போட்டிகளே. 

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் சண்டேவாக அமையவுள்ளது.  பிற்பகல் 3.30 மணிக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டமும், மாலை 7.30 மணிக்கு டோனி தலைமையிலான சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதும் ஆட்டமும் நடைபெறுகிறது.

  நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அனைத்து அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி முக்கால் கிணறு தாண்டிய நிலையில் புதிதாக அறிமுகமான லக்னோ மற்றும் குஜராத அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

  ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை மற்றும் இரண்டு முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ள கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆஃப் ரேசிலிருந்து வெளியேறிவிட்டன. பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு ஐந்து அணிகள் போட்டிபோடுகின்றன.

  ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. இரண்டு அணிகளும் ஓரிரு வெற்றிகளை பதிவு செய்தாலே உள்ளே நுழைந்துவிடலாம். ஆனால் ஹைதராபாத், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இனிவரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு சாத்தியமாகும்.

  இதையும் படிக்க: இன்னமும் கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனிதான் சிறந்த கேப்டன் - ஹர்பஜன் சிங்


  சி.எஸ்.கே அணி 10 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால் பிளே ஆப் செல்ல வாய்ப்பே இல்லை என்று முடிவாகிவிட்டது. இதனால் இனி வரக்கூடிய போட்டிகள் அனைத்தும் சம்பிரதாய போட்டிகளே. இன்று மாலை 7.30 மணிக்கு மும்பை பாடில் மைதானத்தில் நடைபெறும் 55 வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  சென்னை அணியில் மீண்டும் பிராவோ, துபே இணையவுள்ளனர். பிரிட்டோரியஸ் மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகியோர் சரியாக விளையாடாததால் மாற்றப்படவுள்ளனர். பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இனிவரக்கூடிய மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் டீசண்டான இடத்தை பெறவேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் ஆசையாகவுள்ளது.

  டெல்லி அணியை பொருத்தவரை 10 போட்டிகளில் விளையாடி ஐந்து வெற்றியுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் ரேசின் இறுதி முனையில் இருக்கும் டெல்லிக்கு இந்த போட்டி முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. வெற்றி என்ற ஒற்றை இலக்கோடு வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

  மேலும் படிக்க: IPL 2022 RR vs PBKS-பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்- ஓரங்கட்டப்பட்ட ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன், ஹெட்மையர் பினிஷிங் டச்!


  கடந்த போட்டியில் விளையாடாத அக்ஷர் படேல் மீண்டும் அணியில் இணைவது சற்று நம்பிக்கை அளித்தாலும், பிரித்வி ஷா வருவது சந்தேகமே, மீண்டும் குல்தீப் யாதவ் மாயஜாலம் நிகழ்த்தினால் மட்டுமே அணிக்கு வெற்றி சாத்தியம்...

   

  முன்னதாக மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடேவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் - டு பிளஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  ஏற்கனவே இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் 68 க்கு ஆல் அவுட் ஆன ஆர்.சி.பி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.. இரண்டு அணிகளும் பிளே ஆஃப் ரேசில் கடைசி சீட்டில் தொற்றிக்கொண்டிருப்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடுவார் என எதிர்பார்க்கலாம்.

  மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆர்.சி.பி யின் பலம் இன்றைய போட்டியிலும் கைகொடுக்கும் என நம்பலாம். மின்னல் வேக உம்ரான் மாலிக், யார்க்கர் மன்னன் நடராஜன், கடந்த போட்டியில் விக்கெட்டுகளை சாய்த்த மார்கோ சென்சன் என மிரட்டும் பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத் அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.

  பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், த்ரிபாதி இருவரும் ஃபார்முக்கு திரும்பவேண்டியது காலத்தின் கட்டாயம். இரு அணிகளும் இதற்கு முன் விளையாடிய 20 போட்டிகளில் பெங்களூரு அணி 12 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
  Published by:Murugesh M
  First published:

  Tags: CSK, Delhi Capitals, IPL 2022, RCB, Sunrisers Hyderabad

  அடுத்த செய்தி