Home /News /sports /

ஐபிஎல் 2022 : புதிய 2 அணிகளில் இணைய உள்ள வீரர்கள் யார்?

ஐபிஎல் 2022 : புதிய 2 அணிகளில் இணைய உள்ள வீரர்கள் யார்?

ஐ.பி.எல்

ஐ.பி.எல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மற்ற 8 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகளின் நிலை என்ன? அணி விட்டு அணி மாற வாய்ப்பு வீரர்கள் யார் யார்?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா 15 வது முறையாக அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் களைகட்டவுள்ளது. இந்த முறை கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு 10 அணிகளோடு வீரர்கள் களமாடவுள்ளனர். அத்துடன் ஐ.பி.எல். விதிமுறைப்படி இந்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்களுக்கான அணியில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க காலக்கெடு நிர்ணயித்தது.

அதன்படி ஒவ்வொரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக தங்களுக்கான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த பந்தயத்தில் புதிதாக சேர்ந்துள்ள அணிக்கு தங்கள் அணியின் நட்சத்திர முகம் யார் என்பதை தீர்மானிக்க டிசம்பர் 25 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணிகளும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களிலிருந்து மூன்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இரண்டு இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர்கள் என மூன்று வீரர்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஏலத்திற்காக ஒதுக்கப்பட்ட 90 கோடி ரூபாயிலிருந்து 33 கோடி ரூபாய் இந்த மூன்று வீரர்களுக்காக ஒதிக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வீரர்களுக்கும் அதிகபட்சமாக 15 கோடி ரூபாய், அடுத்த நிலை வீரருக்கு 11 கோடி ரூபாய், கடைசி நிலை வீரருக்கு 7 கோடி என அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : கே.எல்.ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை?

தங்கள் அணிக்காக சேர்க்கப்படும் வீரர் கேப்டனாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு 15 கோடி ரூபாய் விலை ஒதுக்கப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு அணிகளும் தங்களுக்கான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்த நிலையில் விடுவிக்கப்பட்ட நட்சத்திர வீரர்களிடம் பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. லக்னோ, அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட இந்த இரண்டு அணிகளில் யார் யார் ஈர்க்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

லக்னோ அணிக்காக ராகுலும், ரஷித் கானும் போட்டி போட்டுக்கொண்டிருக்க அவர்களை தேர்வு செய்ய இவர்களுக்கான ஏலத்தொகையில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. அகமதாபாத் அணி நிர்வாகம் ரெய்னா, ஹர்த்திக், ஸ்ரேயஸ், வார்னர் ஆகிய வீரர்களை தங்கள் அணிக்கு இழுக்கும் முயற்சியில் பிசியாக உள்ளது. வீரர்கள் தேர்வு முடிந்தவுடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 15 வது சீசன் ஐ பி எல் திருவிழா இந்தியாவில் சொந்த மைதானத்தில் போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ தீவிரம் காட்டுகிறது.

Also Read : ஐபிஎல்: அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் யார்யார்? முழு விவரம்

ஐ.பி.எல். தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைந்தது 50 புதிய வீரர்களை கூடுதலாக அறிமுகப்படுத்தும் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் நேருக்கு நேர் இரண்டு லீக் ஆட்டங்கள் என்றை பழைய நிலை மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதே மிகபெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: IPL, IPL 2022

அடுத்த செய்தி