ஐபிஎல் 2022 தொடரில் 6 போட்டிகளிலும் தோல்வி கண்ட ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸும், 5 தோல்வி கண்ட ஜடேஜா தலைமை சிஎஸ்கே அணிகளும் இன்று மோதும் நிலையில் பவுலரே இல்லாமல் திண்டாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி தன் பழைய பவுலரான தவால் குல்கர்னியை நம்பி மீண்டும் அழைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, குல்கர்னியின் பெயர் சென்னை சூப்பர் கிங்ஸுடன் காயம்பட்ட தீபக் சாஹருக்கு பதிலாக பேசப்பட்டது, இஷாந்த் சர்மாவும் பேசப்பட்டார். இந்நிலையில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி வர்ணனைக் குழுவில் கிரிக்கெட் அனலிஸ்டாக பணியாற்றி வருகிறார். மும்பை பவுலர் டைமல் மில்ஸ் காயமடைந்ததால் தவால் குல்கர்னியை மும்பை அழைக்கிறது என்றும் செய்திகள் அடிபட்டு வந்தன.
இருப்பினும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு அறிக்கையின்படி, குல்கர்னியை அவர்களின் பலவீனமான பந்துவீச்சு அமைப்பில் சேர்த்து பலப்படுத்த கேப்டன் ரோஹித் சர்மா விரும்புவதாகவும் வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.
ஐபிஎல் 2022 ஏலத்தில் குல்கர்னி விற்கப்படாமல் போனது குறிப்பிடத்தக்கது. 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய குல்கர்னி, MI, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அவர் 2021 சீசனில் MI உடன் இருந்தார் ஆனால் ஒரே ஒரு ஆட்டத்தை மட்டுமே விளையாட முடிந்தது. ஒட்டுமொத்தமாக, அவர் 28.77 சராசரியில் 86 விக்கெட்டுகளை 4/14 என்ற சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களுடன் எடுத்துள்ளார். 2 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இவர் நல்ல பவுலர் தான், போதிய வேகத்தில் அவுட் ஸ்விங்கர்களை எழுப்பி வீசக்கூடியவர். இவரை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாரை கூப்பிட்டு என்ன பயன்? அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பதே மும்பை இந்தியன்ஸின் பரிதாப நிலை. இப்படியே போனால் பிஷன் பேடி, பிரசன்னா, மொஹீந்தர் அமர்நாத்தையெல்லாம் கூப்பிட வேண்டி வந்து விடும் நிலை மும்பைக்கு ஏற்பட்டு விடக்கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2022, Mumbai Indians