Home /News /sports /

என் சப்போர்ட் மும்பை இந்தியன்ஸுக்குத்தான், மைதானத்துக்கு வந்து சப்போர்ட் செய்வேன் - விராட் கோலி

என் சப்போர்ட் மும்பை இந்தியன்ஸுக்குத்தான், மைதானத்துக்கு வந்து சப்போர்ட் செய்வேன் - விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

தன் சப்போர்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் என்று கூறியுள்ளார், நாங்கள் ஸ்டேடியத்துக்கே வந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற முழு ஆதரவு அளிப்போம் என்று கோலி தெரிவித்தார்.

    ஆர்சிபி அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதையடுத்து பிளே ஆப் வாய்ப்பை 16 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால்தான் ஆர்சிபிக்கு வாய்ப்பு, அதோடு இன்று ராஜஸ்தான் வெற்றி பெறவும் அது பிரார்த்தனை செய்ய வேண்டும், ஏனெனில் ராஜஸ்தான் தோற்று விட்டால் 16 புள்ளிகளில் ராஜஸ்தான், ஆர்சிபி, டெல்லி வென்று விட்டால் அந்த அணியும் 16 புள்ளிகளி மும்முனைப் போட்டியில் ஆர்சிபி நெகெட்டிவ் ரன் ரேட்டில் வெளியேறி விடும். ஒரு வேளை இன்று ராஜஸ்தானும் தோற்று டெல்லியும் தோற்றால் ராஜஸ்தான், ஆர்சிபி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வ்டும்.

    இந்நிலையில்தான் விராட் கோலி ஒரு ருசிகரத்துக்காக தன் சப்போர்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் என்று கூறியுள்ளார், நாங்கள் ஸ்டேடியத்துக்கே வந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற முழு ஆதரவு அளிப்போம் என்று கோலி தெரிவித்தார்.

    ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸிடம் ஜாலியாக பேசிய போது விராட் கோலி, “மும்பை வெற்றி பெற எங்கள் ஆதரவு உண்டு. மும்பைக்கு இன்னும் 2 சப்போர்ட்டர்கள் உள்ளனர். 2 மட்டுமல்ல 25 சப்போர்ட்டர்கள் உள்ளனர் என்றே நினைக்கிறென், எங்களை நீங்கள் ஸ்டேடியத்திலேயே பார்க்கலாம்.” என்று கோலி கூற டுபிளெசிஸ் ஏற்கெனவே மும்பை மும்பை என்று கூவ ஆரம்பித்து விட்டார்.

    கோலி (54 பந்தில் 73)ம்கேப்டன் ஃபா டு பிளெசிஸ் (38 பந்தில் 44) ஆகியோர் 115 ரன்கள் கூட்டணி அமைக்க. அதற்குள் கிளென் மேக்ஸ்வெல் (18 ரன்களில் 40 ரன்) வெளுத்து வாங்க குஜராத் அணிக்கு எதிராக 18.4 ஓவரில் ஆர்சிபி வெற்றி பெற்றது, இந்த வெற்றி மூலம் பஞ்சாப், சன் ரைசர்ஸ் அணிகளை வீட்டுக்கு அனுப்பியது.

    கோலி தன் இன்னிங்ஸ் பற்றிக் கூறும்போது, “இது முக்கியமான போட்டி, அணிக்கு நான் எதுவும் பங்களிப்புச் செய்ய முடியவில்லையே என்று ஏமாற்றத்துடன் இருந்தேன் அதுதான் எனக்குக் கவலையே தவிர புள்ளி விவரங்கள் அல்ல. இன்று ஏதோ என்னால் தாக்கம் ஏற்படுத்த முடிந்தது. நல்ல நிலையில் அணியை கொண்டு வைத்தேன்.

    அணிக்கு நல்ல ஆட்டங்களை ஆடியிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கவே செய்யும். எனவே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். நான் உண்மையில் கடுமையாக உழைக்கிறேன் இந்தப் போட்டிக்கு முன்பு 90 நிமிடங்கள் வலையில் பயிற்சி செய்தேன்” என்றார் விராட் கோலி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Mumbai Indians, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி