Home /News /sports /

IPL 2022- என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே- சஞ்சய் பாங்கர் கருத்துக்குப் பிறகு கோலி மைண்ட் வாய்ஸ்

IPL 2022- என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே- சஞ்சய் பாங்கர் கருத்துக்குப் பிறகு கோலி மைண்ட் வாய்ஸ்

கோலி அவுட்

கோலி அவுட்

ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2 கோல்டன் டக்குகளுடன் ரன் எடுக்கவே திண்டாடி வருவது குறித்து ஆளுக்கு ஆள் கருத்து கூறிவருகின்றனர், இதில் மிகவும் க்ளிஷேவான கருத்து என்னவெனில் ‘கோலி மீண்டு வருவார்’ என்று கூறப்படும் கருத்தே, இதற்கு ஆர்சிபி பேட்டிங் கன்சல்டண்ட் சஞ்சய் பாங்கரும் விதிவிலக்கல்ல.

மேலும் படிக்கவும் ...
    ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2 கோல்டன் டக்குகளுடன் ரன் எடுக்கவே திண்டாடி வருவது குறித்து ஆளுக்கு ஆள் கருத்து கூறிவருகின்றனர், இதில் மிகவும் க்ளிஷேவான கருத்து என்னவெனில் ‘கோலி மீண்டு வருவார்’ என்று கூறப்படும் கருத்தே, இதற்கு ஆர்சிபி பேட்டிங் கன்சல்டண்ட் சஞ்சய் பாங்கரும் விதிவிலக்கல்ல.

    நடப்புதொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் 8 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதுவும் கடைசி இரு ஆட்டங்களில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக்-அவுட் ஆகியிருக்கிறார்.

    கோலி இன்னமும் பீல்டரைத் தடுத்தார் என்ற வகையிலும் ஹிட் விக்கெட் வகையிலும், ஹேண்டில்ட் த பால் வகையிலும்தான் அவுட் ஆகவில்லை, அடுத்து அந்த முயற்சிகளில் இறங்கினாலும் இறங்குவார், கேப்டன்சியை அவரிடமிருந்து இந்திய அணியில் பிடுங்கியவுடனேயே அவரது ஆற்றலெல்லாம் காலாவதியாகி விட்டது. பல் பிடுங்கின பாம்பு போல் ஆகிவிட்டார்.

    அனில் கும்ப்ளேவுக்கு கோலி என்ன செய்தாரோ, அது அவருக்கு நடந்தது, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு கோலி சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

    இந்நிலையில் சஞ்சய் பாங்கர் அவர் மீண்டும் எழுச்சி பெறுவார் என்று கூறுவது ‘சும்மா’ஒரு உத்வேகத்துக்காகத்தான் என்று தெரிகிறது, ஆனால் கோலிக்குத் தெரியாதா, தான் ஆட வேண்டுமா அல்லது இல்லையா என்பது. அதனால் சஞ்சய் பாங்கர் போன்ற கருத்துக்களை நினைத்து அவரது மைண்ட் வாய்ஸ், ‘என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே’ என்று யோசிக்கிறது.

    சஞ்சய் பாங்கர் கூறும்போது, “கோலி, இந்த சீசனில் தொடக்கத்தில் நன்றாகத் தான் ஆடினார். புனேயில் கிட்டத்தட்ட வெற்றிக்குரிய ரன்னை அடிக்கும் நிலைக்கு வந்தார். அதன் பிறகான ஆட்டங்களில் ரன்-அவுட் மற்றும் பேட்டில் சரியாக சிக்காத பந்துகளில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு கடினமான கட்டமாக உள்ளது. எல்லா வீரர்களுக்கும் இது போன்ற நிலைமை வரத்தான் செய்யும். விரைவில் அவர் வலுவான வீரராக மீண்டு வருவார்.

    கோலியைபொறுத்தவரை எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். உடல்தகுதியை மேம்படுத்துவது, பயிற்சி, தேவையான நேரத்தில் ஓய்வு எடுப்பது என்று அனைத்தையும்சரியாகசெய்வதால், தனக்குள் நெருக்கடி வராமல் பார்த்துக் கொள்கிறார். இப்போது அவருக்கு தேவை கொஞ்சம் அதிர்ஷ்டம். நிலைத்து நின்று
    விட்டால் அதன் பிறகு நிச்சயம் பெரிய ஸ்கோர் குவித்து விடுவார்” என்று கூறினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி