Home /News /sports /

IPL 2022 SRH vs GT- முகமது ஷமியை அவமதித்த ஹர்திக் பாண்டியா- பாடம் புகட்டிய நெட்டிசன்கள்

IPL 2022 SRH vs GT- முகமது ஷமியை அவமதித்த ஹர்திக் பாண்டியா- பாடம் புகட்டிய நெட்டிசன்கள்

சீனியர் வீரர் ஷமியை வசைபாடிய பாண்டியா

சீனியர் வீரர் ஷமியை வசைபாடிய பாண்டியா

இந்தியாவுக்கு ஆடும்போது இத்தனை உணர்ச்சிகள் இருக்கிறதோ இல்லையோ, தனி முதலாளிகளுக்கு ஆடும்போது ஐபிஎல் கேப்டன்களுக்கு தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுகிறது, இதற்கு உதாரணமாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மூத்த வீரர், இந்தியாவுக்காக வெற்றிகளைப் பெற்றுத்தந்துக் கொண்டிருக்கும் முகமது ஷமியிடம் தன் மூஞ்சியைக் காட்டிய சம்பவத்தை குறிப்பிடலாம்.

மேலும் படிக்கவும் ...

    அன்று டேவிட் மில்லர் ஷாட் அடிக்க முடியாத போதும், ஒரு ரன்னுக்கு ஓடி வரும் போதும் ஒரு அயல்நாட்டு வீரர் நம் விருந்தாளி என்ற ஒரு தன்மை கூட அசிங்கமாக நடந்து கொண்டார் ஹர்திக் பாண்டியா, இப்படி கோலியின் வாரிசாக இருக்கிறார் ஹர்திக், கூர்ந்து கவனிக்கும் நெட்டிசன்கள் நேற்று முகமது ஷமியை வசைபாடிய ஹர்திக் பாண்டியாவின் ஆவேசத்தை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

    முகமது ஷமி தேர்ட் மேனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார், அவரிடம் கேட்ச் போன்று ஒரு பந்து வந்தது, ஆனால் அதை கேட்ச் செய்யும் முயற்சியில் பந்து பவுண்டரிக்குச் சென்றாலும் சென்று விடும் என்று ஷமி பீல்டிங் செய்து பவுண்டரியை தடுத்தார். அதற்கு ஷமி ஏதோ தன் தெரு கிரிக்கெட் ஆள் போல் ஹர்திக் பாண்டியா அஷ்ட கோணலாக முகத்தை வைத்துக் கொண்டு ஷமியை மூத்த இந்திய வீரர் என்றும் பாராமல் வசைபாடியதை நெட்டிசன்கள் கவனித்து பாண்டியாவுக்கு சரியான பாடம் புகட்டினர்.

    கேன் வில்லியம்சன் ஸ்பெஷல் இன்னிங்சில் நெற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு நிறைவான முதல் உதையை பரிசாக வழங்கியது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Gujarat Titans, Hardik Pandya, IPL 2022

    அடுத்த செய்தி