Home /News /sports /

இந்திய அணியில் உம்ரன் மாலிக்கை தேர்வு செய்யாதீர்கள்- சாத்தி எடுத்துருவாங்க-எச்சரிக்கும் முன்னாள் வீரர்

இந்திய அணியில் உம்ரன் மாலிக்கை தேர்வு செய்யாதீர்கள்- சாத்தி எடுத்துருவாங்க-எச்சரிக்கும் முன்னாள் வீரர்

உம்ரன் மாலிக் -ஹர்திக் பாண்டியா

உம்ரன் மாலிக் -ஹர்திக் பாண்டியா

இந்திய அணிக்கு அதற்குள் காஷ்மீர் அதிவேக பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக்கை சேர்க்காதீர்கள், வெறும் வேகம் மட்டுமே உள்ள அவர் நிச்சயம் சாத்து வாங்கி விடுவார் என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

    இந்திய அணிக்கு அதற்குள் காஷ்மீர் அதிவேக பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக்கை சேர்க்காதீர்கள், வெறும் வேகம் மட்டுமே உள்ள அவர் நிச்சயம் சாத்து வாங்கி விடுவார் என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

    அவர் திறமையான பவுலர் ஆனால் வெறும் வேகம் மட்டுமே போதாது, நுணுக்கமும் நுட்பமும் அவசியம்.இல்லையெனில் அடி வாங்கி கரியரே நாசம் ஆகிவிடும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா.

    உம்ரன் மாலிக் தொடர்ந்து 150 கிமீ வேகத்தை எட்டியிருக்கலாம், ஆனால் கடந்த சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கி வருகிறார் உம்ரன் மாலிக். தேசிய அணிக்காக விளையாட இன்னும் தயாராக இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

    ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவர் கூறியதாவது:

    உம்ரன் மாலிக் இன்னும் இந்தியாவுக்கு ஆடத் தயாராக இல்லை. ஆனால் அவர் மணிக்கு 150 கிமீ வேகம் வீசுவதை பார்க்கவே ஆர்வமாக இருக்கிறோம்.ஆனால் அந்த இளைஞர் இன்னும் ‘ரா பேஸ்’ வீசுகிறாரே தவிர நுணுக்கம் இல்லை, அவர் இந்தியாவுக்கு ஆடும் நேரம் வரும் இப்போதைக்கு அவர் தயாராக இல்லை.

    ஐபிஎல் போட்டிகளில் கடைசி 2 ஆட்டங்களில் வீசியதை வைத்து நான் இதைக்கூறவில்லை. அவர் இந்திய ஸ்குவாடில் இருக்கலாம் ஆனால் பிளேயிங் லெவனில் ஆட அவர் இன்னும் தயாராகவில்லை. அவரை வளர்த்தெடுக்க வேண்டும், அவரைக் காக்க வேண்டும். அவரை எடுத்த எடுப்பில் நீச்சல் தெரியாமல் ஆழ்கடலில் தள்ளக்கூடாது, என்றார் ஆகாஷ் சோப்ரா.

    ஆனால் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் ஆகாச் சோப்ராவை மறுத்துக் கூறும்போது, “மணிக்கு 157 கிமீ வேகம் வீசுகிறார், இவர் போன்று இன்றைக்கு யாரும் வீசுவதில்லை. கட்டுக்கோப்புடன் தான் வீசுகிறார். அணியில் பும்ரா, ஷமி இருக்கும் போது இவரையும் எடுத்தால் அவர் கற்றுக் கொள்ள முடியும்” என்றார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் உம்ரன் இருப்பாரா என்று பார்ப்போம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, SRH

    அடுத்த செய்தி