முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022: டைம் முடிஞ்சப்பறம் ரிவியூவா - நடுவரால் சர்ச்சை

IPL 2022: டைம் முடிஞ்சப்பறம் ரிவியூவா - நடுவரால் சர்ச்சை

டைம் முடிஞ்சு ரிவியூ கேட்ட நடுவர்

டைம் முடிஞ்சு ரிவியூ கேட்ட நடுவர்

மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரப்சிம்ரன் அவுட் விவகாரத்தில் நடுவரின் கவனக்குறைவினால் சர்ச்சை எழுந்தது, ரிவியூ வேண்டுமென்றால் 15 விநாடிகளுக்குள் கேட்க வேண்டும், ஆனால் கேன் வில்லியம்சன் ரிவியூ கேட்ட போது பூஜ்ஜியம் வந்து விட்டது. நடுவரும் ரிவியூ கேட்டார், இது எப்படி என்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரப்சிம்ரன் அவுட் விவகாரத்தில் நடுவரின் கவனக்குறைவினால் சர்ச்சை எழுந்தது, ரிவியூ வேண்டுமென்றால் 15 விநாடிகளுக்குள் கேட்க வேண்டும், ஆனால் கேன் வில்லியம்சன் ரிவியூ கேட்ட போது பூஜ்ஜியம் வந்து விட்டது. நடுவரும் ரிவியூ கேட்டார், இது எப்படி என்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காயம் காரணமாக பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், பவுலிங் தேர்ந்தெடுத்தார்.

பஞ்சாப் அணியில் தவான் மற்றும் பிரப்சிம்ரன் ஆகியோர் களமிறங்கினர். 11 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த பிரப்சிம்ரன், நடராஜன் வீசிய 5வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவருடைய அவுட் தான் சர்ச்சையானது. பேட்டில் பட்டது குறித்து பவுலர் நடராஜன் மற்றும் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தெளிவாக கூறாததால் மைதானத்தில் குழப்பம் நிலவியது.

கேப்டன் வில்லியம்சனும் குழப்பத்தில் ரிவ்யூ எடுக்கலாமா? வேண்டாமா? என வீரர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். அதற்குள் ரிவ்யூ டைம் பூஜ்ஜியத்தை எட்ட, அந்த நேரத்தில் வில்லியம்சன் ரிவ்யூ எடுப்பதாக கூறினார். அம்ப்யரும் வில்லியம்சன் அப்பீலுக்கு ஒப்புக்கொண்டு ரிவ்யூ பரிந்துரை செய்தார். இதற்கு களத்தில் இருந்த பஞ்சாப் பேட்ஸ்மேன் பேரிஸ்டோவ் அப்பீல் செய்தார். டைம் முடிந்த பிறகு எப்படி அப்பீல் கொடுப்பீர்கள்? என கேட்க, அம்ப்யர் மழுப்பலாக பதில் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

பின்னர், ரிவ்யூவில் பிரப்சிம்ரன் அவுட் என தெரியவந்து, வெளியேறினார். இந்த சர்ச்சைக்குரிய ரிவ்யூவால் பஞ்சாப் அணி கூடாரத்தில் சலசலப்பு எழுந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், லிவிங்ஸ்டோன் அதிரடியில் அந்த அணி 151 ரன்கள் எடுத்தது. அவர் 33 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளி நடுவர்கள் மோசமாக பணியாற்றி வருகின்றனர், நோ-பால், வைடுகளில் சர்ச்சைக்குரிய முடிவுகளை ஒரு அணிக்கு சாதகமாக இன்னொரு அணிக்கு பாதகமாக பட்சபாதமாக செயல்படுவதாக ரசிகர்கள் மத்தியில் இந்த ஐபிஎல் தொடர் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: IPL 2022, Punjab Kings, SRH