முகப்பு /செய்தி /விளையாட்டு / தன் முந்தைய அணியை 2வது முறையாகப் பழி தீர்த்த குல்தீப் யாதவ்: சச்சின், ரோஹித் சாதனை சமன்

தன் முந்தைய அணியை 2வது முறையாகப் பழி தீர்த்த குல்தீப் யாதவ்: சச்சின், ரோஹித் சாதனை சமன்

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

கடந்த சீசன்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ்வை, சிறப்பாக விளையாடவில்லை எனக் கூறி அந்த அணி கழற்றி விட்டது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக கொல்கத்தாவை கடந்த 2 போட்டிகளாக படுத்தி எடுக்கிறர் குல்தீப் யாதவ் 8 விக்கெட்டுகளை கொல்கத்தாவுக்கு எதிராக மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கடந்த சீசன்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ்வை, சிறப்பாக விளையாடவில்லை எனக் கூறி அந்த அணி கழற்றி விட்டது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக கொல்கத்தாவை கடந்த 2 போட்டிகளாக படுத்தி எடுக்கிறர் குல்தீப் யாதவ் 8 விக்கெட்டுகளை கொல்கத்தாவுக்கு எதிராக மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

டெல்லி அணிக்காக 2 போட்டிகளில் 8 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக்கைப்பற்றியுள்ளார் குல்தீப். நேற்று 3 ஓவர்களை வீசிய அவர் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், அதில் 8 விக்கெட்டுகளை கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டுமே எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய குல்தீப் யாதவ் 35 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், கொல்கத்தா அணியை குல்தீப் இந்த ஐபிஎல் போட்டியில் பழிக்கு பழி தீர்த்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்துக்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

நேற்று நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றதன் மூலம் அவர் நடப்பு சீசனின் 5-வது ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் சச்சின் (2010), ரோகித் சர்மா (2016), ருதுராஜ் (2021), அமித் மிஸ்ரா (2013), யூசப் பதான் (2008) ஆகியோரோடு 2-வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி (2016) 5 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

First published:

Tags: IPL 2022, Kuldeep Yadav