Home /News /sports /

IPL 2022- ஓவர் கிரிக்கெட், கிரிக்கெட்டுக்கே ‘ஓவர்’ சொல்லிவிடுமோ?- டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது

IPL 2022- ஓவர் கிரிக்கெட், கிரிக்கெட்டுக்கே ‘ஓவர்’ சொல்லிவிடுமோ?- டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த ஆண்டு முதல் வாரத்தை ஒப்பிடுகையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு முதல் வாரத்தில் இருந்த 3.75 டிவிஆர்-யில் இருந்து 2.52 டிவிஆர்- ஆக குறைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பொருளாதாரத்தில் ஒரு ஃபேமஸ் கோட்பாடு உண்டு, அது ‘law of diminishing returns' என்று அழைக்கப்படும், இதன் பாப்புலர் பொருள் என்னவெனில் அளவுக்கதிகமானால் அமிர்ந்தமும் நஞ்சு என்று நம் பைந்தமிழில் கூறும் வாசகத்தின் அர்த்தம் தான், எதுவுமே ஓவர் டோஸ் ஆனால் திகட்டவே செய்யும். ஐபிஎல் கிரிக்கெட் முதலாளிகளுக்கான கிரிக்கெட் ஆகிவிட்டது, முதலீட்டியத்தின் கிரிக்கெட், எனவே ஆட்டோமேட்டிக்காக அதில் ரசிகர்கள் ஆர்வமிழப்பது சகஜம் தானே. எனவே தான் ஆண்டுக்காண்டு ஐபிஎல் தொடருக்கான தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    எந்த ஒன்றையுமே பயன்படுத்தப் பயன்படுத்த தேய்மானம் அதிகமாவது போல் நம் ரசனை, ருசிகளுக்குமே தேய்மானம் உண்டு, அந்த வகையில் ஐபிஎல் தொடரை இன்னும் கிரிஸ்ப்பாக மாற்றி குறைந்த போட்டிகளில் அதிக ஆர்வத்தைக் கூட்டினால்தான் உண்டு. மெகா சீரியல் போல் ஆடிக்கொண்டே இருந்தால் அது சரிப்பட்டு வராடு என்றே ரசிகர்கள், பார்வையாளர்கள் கருதலாம் அதுவும் இப்போது எக்சாம் டைம்.

    ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது. கடந்த வருடம் இருந்த 8 அணிகள் போக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இந்த முறை புதிதாக தொடரில் இணைந்துள்ளன.

    இந்த தொடர் தொடங்கி தற்போது ஏறக்குறைய 2 வாரங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் இந்த தொடரை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு முதல் வாரத்தை ஒப்பிடுகையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு முதல் வாரத்தில் இருந்த 3.75 டிவிஆர்-யில் இருந்து 2.52 டிவிஆர்- ஆக குறைந்துள்ளது.

    தற்போது வரை நடந்துள்ள போட்டிகளில் லக்னோ , ராஜஸ்தான் , குஜராத் ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 14 முறை நடந்துள்ள ஐபிஎல் தொடரில் 9 முறை கோப்பைகளை வென்றுள்ள சென்னை மற்றும் மும்பை அணிகள் இது வரை இந்த தொடரில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

    சாம்பியன் அணிகளின் தொடர் தோல்விகளால் ரசிகர்களின் எண்னிக்கை குறைந்துள்ளதா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. வழக்கமான அன்னியமாதல் கோட்பாடுதான், யாரோ முதலீடு செய்கிறார்கள், யாரோ சம்பாதிக்கிறார்கள் நமக்கு என்ன இதில் இருக்கிறது என்ற மனோபாவமும் காரணமாக இருக்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி