Home /News /sports /

ஐ.பி.எல். 2022 ஏலத்தில் பங்கேற்க 1,214 கிரிக்கெட் வீரர்கள் விருப்பம்... பெங்களூருவில் நடைபெறுகிறது மெகா ஏலம்

ஐ.பி.எல். 2022 ஏலத்தில் பங்கேற்க 1,214 கிரிக்கெட் வீரர்கள் விருப்பம்... பெங்களூருவில் நடைபெறுகிறது மெகா ஏலம்

நடைபெறவுள்ள ஏலத்தில் மொத்தம் 217 வீரர்கள் மட்டுமே அணிகளுக்கு எடுக்கப்படுவார்கள். இவர்களில் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் அதிகபட்சமாக 70 பேர் வரை இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஐபிஎல் 2022 ஏலத்தில் பங்கேற்பதற்காக உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் என மொத்தம் 1,214 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கடைசி நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தவர்களில் 896 பேர் இந்திய வீரர்கள், 318 பேர் வெளிநாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வெளிநாட்டு வீரர்களை பொருத்தளவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 59 பேர் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 48 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளார்கள். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 41 வீரர்கள், இலங்கையை சேர்ந்த 36 வீரர்கள், இங்கிலாந்தை சேர்ந்த 30 வீரர்கள், நியூசிலாந்தில் இருந்து 29 வீரர்கள், ஆப்கனில் இருந்து 20 பேர் ஐபிஎல் 2022 ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மொத்தம் 10 அணிகள் போட்டியிடுகின்றன.

    ஓர் அணி அதிகபட்சமாக 25 வீரர்களை வரை வைத்துக்கொள்ளலாம் என்கிற விதிமுறை உள்ளது. ஏற்கனவே 33 வீரர்கள் அந்தந்த அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் நடைபெறவுள்ள ஏலத்தில் மொத்தம் 217 வீரர்கள் மட்டுமே அணிகளுக்கு எடுக்கப்படுவார்கள். இவர்களில் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் அதிகபட்சமாக 70 பேர் வரை இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோவை மையமாகக் கொண்ட அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடக்க ஏலமாக மொத்தம் 6 வீரர்களை எடுத்துக் கொண்டுள்ளனர். இதன்படி, அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார். அவர் ரூ. 15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவருடன் ஆப்கன் ஆல்ரவுண்டர் ரஷித் கான் ரூ. 15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

    லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ரூ.17 கோடிக்கு லக்னோ அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: IPL

    அடுத்த செய்தி